ஜெயம், அந்நியன் பட நடிகை சதா.. 41 வயதிலும் ஆளைமயக்கும் அதே அழகு!
சென்னை: ஜெயம் படத்தில், பாவாடை தாவணி, கொலுசுடன் வலம் வந்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சதா. குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் வசியம் செய்த சதா. போய்யா.... போ... என்ற வசனத்தை பேசி பிரபலமானார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பட வாய்ப்பே இல்லாததால் இணையத்தில் ஆட்டம் போட்டு வருகிறார்.
ஜெயம் படத்திற்கு பின், இயக்குநர் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில், விக்ரமிற்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அம்சமான குடும்பப்பெண்ணாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சதாவிற்கு திடீரென பட வாய்ப்பு குறைந்து போனதால், கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் இறங்கி கவர்ச்சியை தாராளமாகவே காட்டத்தொடங்கினார். விட்ட மார்க்கெட் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என நினைத்த நடிகை சதா, எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தார்.

நடிகை சதா: காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்ததால், ஒன்றிரண்டு வாய்ப்புகளும் குறைந்து போனதால், வேறு வழியே இல்லாமல், டார்ச் லைட் என்ற விவகாரமான படத்தில் விலைமாதுவாக நடித்தார். விலைமாதுவின் அவலத்தை சொல்லும் கதை, இதில் நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து நடித்தார். ஆனால், அந்த படத்தின் கதை மொக்கையாக இருந்ததால், இந்த படத்திற்கு பிறகு இவரின் இமேஜ் மொத்தமாக சரிந்தது.
சதாவா இப்படி என்று சொல்லும் அளவிற்கு பல விமர்சனங்கள் எழுந்தன.
முரட்டு சிங்கிள்: அந்த படத்திற்கு பின் சினிமாவைவிட்டு மொத்தமாக காணாமல் போன சதா, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சதா, தற்போது புகைப்பட கலைஞராக மாறி காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார். 41 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாவே இருக்கிறார்.
இதனால், திருமணம் குறித்து பேசி உள்ள நடிகை சதா, திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம், திருமணத்தின் மீது எனக்கு விருப்பம் இல்லை என்றார். நடிகை சதாவிற்கு புகைப்படம் எடுப்பதில் இருக்கும் ஆசையால், தேடி வரும் சினிமா வாய்ப்பையும் வேண்டாம் என்று நிராகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
வீடியோ: இதையடுத்து நடிகை சதா தனது இன்ஸ்டாகிராமில், மார்டன் உடையில் 'அக்கடான்னு நாங்க உடை போட்டா' பாடலுக்கு அட்டமாக நடனமாடி உள்ளார். தற்போது அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அட நம்மா சதாவா இது என்றும், அதே அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











