விவகாரமான படம்.. பெயரை கெடுத்துக்கொண்ட சதா.. மொத்த மார்க்கெட்டும் போச்சு!

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சதா. விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பட வாய்ப்பே இல்லாததால், சினிமாவில் தென்படுவதே இல்லை. பட வாய்ப்பு இல்லை என்றாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சதாவா இது என கேட்டு வருகின்றனர்.

ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்தில், பாவாடை தாவணி, கொலுசு அணிந்து வந்து, குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் வசியம் செய்தார் நடிகை சதா. இந்த படத்தில் இவர் பேசிய 'போ' வசனமும் இவர் கையை தூக்கி பேசிய விதமும் இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கும் டைலாக்காகவே உள்ளது.

Jayam movie heroine actress sadha latest photos

இந்த திரைப்படத்தின் மூலமாக தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார் சதா. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், விக்ரமுடன் அன்னியன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்திலும், அம்சமான குடும்பப்பெண்ணாக நடித்திருந்தார்.

கிளாமரில் இறங்கிய சதா: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சதா, கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் இறங்கி கவர்ச்சியை தாராளமாகவே காட்டத்தொடங்கினார். மார்க்கெட் சுத்தமாக குறைந்துபோனதால், எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தார். அதுகூட பரவாய் இல்லை என்று சொல்லும் அளவிற்கு, டார்ச் லைட் என்ற விவகாரமான படத்தில் விலைமாதுவாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகி விட்டது. என்ன சதா இந்த மாதிரி படத்துல எல்லாம் நடிக்கிறீங்க என்று இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

மும்பையில் பிசினஸ்: நடிகை சதா மும்பையில் Earthlings cafe நடத்தி வருகிறார். லாபகரமாக சென்றுக் கொண்டிருந்த அந்த எர்த்லிங்ஸ் கஃபேவை மூடப் போகிறேன் என நடிகை சதா சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதன் பிறகு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால், கஃபே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

Jayam movie heroine actress sadha latest photos

எலும்பும் தோலுமாக: இந்நிலையில் நடிகை சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விதவிதமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் பார்ப்பதற்கு சதா, க்யூட்டாக இருந்தாலும், இணையவாசிகள் எலும்பும் தோலுமாக இருக்கிறார் என்றும், வயசு ஆனது முகத்தில் நன்றாக தெரிகிறது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சதாவோ எப்படியாவது விட்ட மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என தினமும் விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X