Sadha: எனக்கு திருமணமா? நடிகை சதா சொன்ன அந்த விஷயம்.. ஆளே மாறிட்டாங்களே!

சென்னை: ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்தில், பாவாடை தாவணி, கொலுசு அணிந்து வந்து, குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் வசியம் செய்தார் நடிகை சதா. போய்யா.... போ... என்ற வசனத்தை பேசி பிரபலமானவர் சதா. விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பட வாய்ப்பே இல்லாததால், சினிமாவில் தென்படுவதே இல்லை. 41 வயதான சதா, தனது திருமணம் குறித்து முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

ஜெயம் படத்திற்கு பின், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில், விக்ரமிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்திலும், அம்சமான குடும்பப் பெண்ணாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சதாவிற்கு திடீரென பட வாய்ப்பு குறைந்து போனதால், கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் இறங்கி கவர்ச்சியை தாராளமாகவே காட்டத்தொடங்கினார். விட்ட மார்க்கெட் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என நினைத்த சதா, எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தார்.

Sadha photos
Photo Credit:

நடிகை சதா: காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்ததால், அவ்வப்போது வந்த ஒன்றிரண்டு வாய்ப்பும் குறைந்து போனதால், வேறு வழியே இல்லாமல், டார்ச் லைட் என்ற விவகாரமான படத்தில் விலைமாதுவாக நடித்தார். விலைமாதுவின் அவலத்தை சொல்லும் கதை கொண்ட அந்த படத்தில் நடித்தால், நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து நடித்தார். ஆனால், அந்த படத்தின் கதை மொக்கையாக இருந்ததால்,இந்த படத்திற்கு பிறகு இவரின் இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகி விட்டது. சதாவா இப்படி என்றும், என்ன இந்த மாதிரி படத்துல எல்லாம் நடிக்கிறீங்க என்று இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.

எனக்கு திருமணமா: அந்த படத்திற்கு பின் சினிமாவைவிட்டு மொத்தமாக காணாமல் போன, மும்பையில் Earthlings cafe நடத்தி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சதா, தற்போது புகைப்பட கலைஞராக மாறி காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார். 41 வயதாகும் சதா இன்னும் திருமணம் சிங்கிளாவே இருக்கிறார். அவரை பார்க்கும் ரசிகர்கள் பலரும் எப்போது திருமணம் என கேட்டு வருகின்றனர். இதனால், திருமணம் குறித்து பேசி உள்ள நடிகை சதா, திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம், திருமணத்தின் மீது எனக்கு ஆசையும் இல்லை நம்பிக்கையும் இல்லை. புகைப்பட துறையில் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயமே நிறைய இருக்கு, அதன் பிறகு தான் திருமணத்தை பற்றி யோசிப்பேன் என கூறியுள்ளார். நடிகை சதாவிற்கு புகைப்படம் எடுப்பதில் இருக்கும் ஆசையால், தேடி வரும் சினிமா வாய்ப்பையும் வேண்டாம் என்று நிராகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை சதாவை பார்ப்பதற்கு எலும்பும் தேலுமா இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி ஆகிட்டீங்க என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X