என்ன கெனிஷா சித்ரா தேவி ப்ரியா மாதிரி பாடுறீங்க.. ரவியும் பாவமா?.. இப்படி கலாய் விழுதே

சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்துவிட்டது. ஆர்த்தியுடனான பிரிவுக்கு கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக பழகியதுதான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அதை முதலில் மறுத்த ரவி; போகப்போக அந்தப் பேச்சின்படியே கெனியுடன் நெருக்கம் காட்டிவருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது

கோலிவுட்டில் ஒரு ஹீரோ வளர்ந்தாலே அவரை சுற்றி சர்ச்சைகளும் வளர்ந்துவிடும். ஆனால் ரவி மோகன் மீது எந்த கிசுகிசுவும் கிளம்பியதில்லை, சர்ச்சைகளும் வந்ததில்லை. தனக்கு குஷ்பூ மூலம் பழக்கமான ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளாக வலம் வந்தார்கள் அவர்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அந்த உறவில் சின்ன விரிசல் ஒன்று விழ ஆரம்பித்து அது நாளடைவில் பெரிதாக மாறியது.

Jayam Ravi and Kenishaa Francis Sing Kanmani Anbodu Together Netizens React
Photo Credit:

பிரிவதாக அறிவித்த ரவி: சின்ன பிரச்னைதானே சரியாகிவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் நாளாக நாளாக விரிசல் அதிகம் ஆனதையடுத்து ஆர்த்தியை பிரிவதாக ரவி அறிவித்தார். எப்படியாவது ரவியுடன் மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என பல முயற்சிகளை ஆர்த்தி எடுத்தார். ஆனால் எதற்குமே ஒத்துவரவில்லை ரவி. எனவே வேறு வழியில்லாமல் பிரிவுக்கு ஒத்துக்கொண்ட ஆர்த்தி; தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக தர வேண்டும் என ஒரே போடாக போட்டார். இன்னும் அவர்களுக்கு சட்டப்பூர்வ விவாகரத்து கிடைக்கவில்லை.

Also Read
சிவி சண்முகம் வீட்டிலேயும் இறங்கிய புது ஷோபா.. புஷ்பா 2 பாணியா? என கேள்வி எழுப்பிய பிரபலம்!
சிவி சண்முகம் வீட்டிலேயும் இறங்கிய புது ஷோபா.. புஷ்பா 2 பாணியா? என கேள்வி எழுப்பிய பிரபலம்!

இதற்கெல்லாம் என்ன காரணம்?: அதேபோல் இந்த விஷயத்தில் பல அறிக்கை போர்களும் நடந்தன. 'தன்னை ஆர்த்தியின் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும்; வீட்டு வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட தனக்கு கிடைக்கவில்லை' என்று ரவி கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ஆர்த்தியின் தாய் சுஜாதாவைத்தான் அவர் நேரடியாக அட்டாக் செய்திருந்தார். ரவி தன்னை அட்டாக் செய்ததை அடுத்து எமோஷனலாக அறிக்கை வெளியிட்ட சுஜாதா; உங்களை மகனாக நினைக்கிறேன் என்று உருக்கமாகவும் பேசியிருந்தார்.

கெனிஷாவுடன் நெருக்கம்: இப்படி மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருப்பதை பார்த்த நீதிமன்றம்; இனி யாரும் அறிக்கை வெளியிடக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது. இதற்கிடையே இந்த பிரிவுக்கு காரணமே கெனிஷாதான் என்று தகவல்கள் வந்தன. முதலில் அதை ரவியும், கெனிஷாவும் மறுத்துவிட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு பேரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றார்கள். மேலும் ரவியின் தயாரிப்பு நிறுவன தொடக்க விழாவிலும் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார் கெனி.

ட்ரெண்டாகும் வீடியோ: அவர்கள் இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே சொல்கிறார்கள் பலரும். இந்நிலையில் கெனிஷா மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாடல் பாடினார். அதில் ரவியும் மேடையேறி பாடினார். இரண்டு பேரும், குணா படத்தில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை பாடினார்கள். அந்தப் பாடலை கெனிஷா பாடிய விதத்தை பார்த்த நெட்டிசன்ஸோ, என்ன ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் சித்ரா தேவி பிரியா போல் பாடுகிறார் என எக்கச்சக்கமாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி ரவியும் பாவம் என பரிதாப கமெண்ட்ஸ்களை போடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X