மலையாளப் படம் தயாரிக்கிறார் ஜெயப்ரதா!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படவுலகில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தீவிர அரசியலில் புகுந்த அவர் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. ஆனார். பின்னர் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
முலாயம்சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகிய அமர்சிங்குக்கு ஆதரவாக தானும் கட்சியில் இருந்து வெளியேறினார். தற்பேது இவர் சினிமா படம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக ஜெயப்பிரதா எண்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனம் முதன் முதலாக மலையாளத்தில் படம் தயாரிக்கிறது. அந்த படத்தை மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஆர்.சரத் இயக்குகிறார்.
நடிகர் முகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயப்பிரதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக வேறொருவர் நடிக்கிறார். ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கன்யாகுமரி, நாகர்கோயிலில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











