»   »  மீண்டும் வரும் ஜெயஸ்ரீ!

மீண்டும் வரும் ஜெயஸ்ரீ!

Subscribe to Oneindia Tamil

தென்றலே என்னைத் தொடு நாயகி ஜெயஸ்ரீ மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். முதல்கட்டமாக சன் டிவியின் திருவாளர் திருமதி நிகழ்ச்சியின் மூலம் கேமராவுக்கு முகம் காட்டவுள்ளார்.

தமிழ் திரையுலகம் கண்ட மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதரின் கடைசி அறிமுகம் (நாயகியரில்)ஜெயஸ்ரீ. அவரது இயக்கத்தில் உருவான தென்றலே என்னைத் தொடு மூலம் சினிமாவுக்கு வந்த ஜெயஸ்ரீ படுவேகமாக முன்னேற்றம் கண்டு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 25 படங்களில் நடித்து முடித்தார்.

பிறகு 2வது ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். புதுமுக வரவுகளின் பெருக்கத்தால் நடிப்பை விட்டு விட்டு1988ம் ஆண்டு சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துஇல்லத்தரசியானார்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1997ல் ராமராஜனுடன் விவசாயி மகன் படத்திலும், கார்த்திக்கின்பிஸ்தா படத்திலும் தலை காட்டினார்.

அதன் பிறகு ஜெயஸ்ரீ முழுமையாக சினிமா பக்கம் வராமல் இருந்தார். இந்த நிலையில் சன் டிவியில்ஒளிபரப்பாக இருக்கும் திருவாளர் திருமதி என்ற கேம் ஷோவை வழங்க கலக்கலாக சென்னைக்கு வந்துள்ளார்.

அந்தக் கால ஜெயஸ்ரீயிடம் இருந்த அதே அழகு இன்னும் அப்படியே மிச்சம் இருக்கிறது. இவரது காலநாயகிகள் எல்லாம் குண்டடித்துக் கிடக்கும் நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் அப்படியே ஸ்லிம்மாக, டிரிம்மாகஇருக்கிறார். கூடுதலாக முக அழகு கூடிக் கிடக்கிறது.

மறுபடியும் சினிமாவுக்கு வரப் போறீங்களா என்று கேட்டபோது, சந்தோஷமாக பேசினார் ஜெயஸ்ரீ. நான் எந்தக்காலத்திலும் சினிமாவை வெறுத்தவள் அல்ல, சினிமாவை தீவிரமாக காதலிப்பவள் நான். ஸ்ரீதரின் அறிமுகம்என்ற பெருமை எனக்கு உண்டு.

நான் எந்த முடிவாக இருந்தாலும் அதை எனது கணவருடன் விவாதிப்பேன். அவர்தான் திருவாளர் திருமதிநிகழ்ச்சியில் என்னைப் பங்கேற்க உற்சாகம் கொடுத்தார்.

எனக்கு 2 மகன்கள் (அட!) மூத்தவன் அர்ஜூனுக்கு 12 வயசாகிறது. சின்னவன் கிருஷ்ணாவுக்கு 8 வயது. நான்அமெரிக்காவில் சும்மா இல்லை. சான்பிரான்சிஸ்கோவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறேன்.

விடுமுறைக்காக சென்னைக்கு வந்த இடத்தில் திருவாளர் திருமதி நிகழ்ச்சி கிடைத்தது. மறுபடியும் அடுத்த மாதம்அமெரிக்கா செல்கிறேன். மீண்டும் வாய்ப்பு வந்தால் நடித்துக் கொடுப்பேன்.

சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கத் தயார். கலைத்துறையை நான் ஆழமாக நேசிப்பதால், பெரியஇடைவெளி விட்டிருந்தாலும் கூட என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்கிறார்.

நல்ல நடிகையான ஜெயஸ்ரீ மீண்டும் நடிக்க வந்தால் அது சினிமாவுக்குத்தான் லாபம். வாய்ப்பு கொடுத்துத்தான்பாருங்களேன் தயாரிப்பாளர்களே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil