ஜஸ்பா படத்தில் ஜான் ஆபிரஹாம் ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராய்!

மும்பை: ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜஸ்பா திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜான் ஆபிரஹாம் நடிக்க உள்ளார்.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2010ம் ஆண்டு சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கத்தில் குஸாரஷ் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஆரத்யா எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தையைக் கவனித்துக் கொண்டே சில விளம்பரப் படங்களில் மட்டும் நடித்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தையைக் கவனிப்பதற்காக சினிமாவை விட்டு விலகியிருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

ஜஸ்பா...

ஜஸ்பா...

மணிரத்னம் தெலுங்கு மற்றும் தமிழில் எடுக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது சஞ்சய் குப்தா இயக்கும் ஜஸ்பா படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா.

5வது படம்...

5வது படம்...

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக ஜான் ஆபிரஹாம் நடிக்கிறார். இந்த திரைப்படம் ஜான் ஆப்ரஹாம் மற்றும் சஞ்சய் குப்தா இணையும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் காட்சிகள்...

ஆக்‌ஷன் காட்சிகள்...

கேங்ஸ்டார் கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா கிளாமர் மற்றும் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ல் ரிலீஸ்...

2015ல் ரிலீஸ்...

இதற்காக அவர் தன் உடல் எடையை 8 கிலோ குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இந்த திரைப்படம் 2015-ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான் ரொம்ப ஹேப்பி...

ஜான் ரொம்ப ஹேப்பி...

படத்தின் கதையைக் கேள்விப்பட்ட ஜான் ஆபிரஹாம் உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம். மீண்டும் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிப்பதில் ஜான் ஆபிரஹாமுக்கு மிகவும் மகிழ்ச்சி என படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X