twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்கேப் ஆகி திரும்பிய நடிகை-பெற்றோர் மீது சரமாரி புகார்

    By Staff
    |
    Jennifer
    20 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட நடன நடிகை ஜெனீபர் என்ற டயானா திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது வளர்ப்பு பெற்றோர் மீது சரமாரியான புகார்களைக் கூறி பாதுகாப்பு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சி பொன்மலை தெற்கு திருநகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவரது மனைவி மரியபுஷ்பம். இவர்களது வளர்ப்பு மகள் ஜெனிபர் என்ற டயானா.

    சிறு வயது முதலே தனது மகளுக்கு நடனத்தைக் கற்றுக் கொடுத்தார் மரிய புஷ்பம். எதிர்காலத்தில் நடிகையாக்க வேண்டும் என்ற ஆசையுடன் இதை செய்து வந்தார்.

    திரைப்பட டான்ஸ் மாஸ்டர் கலாவின் குழுவில் ஜெனீபர் ஆடியுள்ளார். சில திரைப் படங்களிலும் நடித்துள்ளார். ஒரு படத்தில் ஹீரோயினாகக் கூட புக் ஆனார்.

    சமீபத்தில் திருச்சியில் நடந்த நடிகை நமீதாவின் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஆடினார். இதில் ஆடுவதற்காக ஜெனீபருக்கு ஜவுளி நிறுவன அதிபர் சாதிக் உசேன் என்பவர் உதவினார்.

    இதையடுத்து ஜெனீபருக்கும் சாதிக் உசேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி முதல் ஜெனீபரைக் காணவில்லை.

    இதையடுத்து மரியபுஷ்பம் திருவெறும்பூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சாதிக் உசேனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் ஜெனீபர் நாமக்கல்லில் உள்ள ஒரு விடுதியில், வார்டனாக வேலை பார்த்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து திருவெறும்பூர் மகளிர் போலீசார் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந் நிலையில், 20 நாட்கள் வீட்டில் அமைதியாக இருந்த ஜெனீபர், கடந்த 2-ந் தேதி மீண்டும் மாயமாகி விட்டார். இதைத்தொடர்ந்து ஜெனீபரின் தாயார் மரியபுஷ்பம் மீண்டும் தன் மகள் காணவில்லை என்று திருவெறும்பூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில், ஜெனீபர் திருவெறும்பூர் மகளிர் போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சினிமாவில் என்னை நடிக்க வைத்து பணம் சம்பாதிக்க என் அம்மா ஆசைப்படுகிறார். எனவே நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். ஆகவே என்னை யாரும் தேட வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால் இந்தப் புகார்களை மறுத்த மரிய புஷ்பம், எனது மகளை உசேன்தான் கடத்தியுள்ளார். அவரை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று விற்க முடிவு செய்துள்ளார்.
    எனது மகளை போலீஸார் மீட்டுத் தர வேண்டும். இல்லாவிட்டால், குடும்பத்துடன் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் குதிப்பேன் என்று கூறியிருந்தார்.

    இந் நிைலயில் திடீரென ஜெனீபர் திருச்சி நீதிமன்றத்திற்கு தனது வக்கீல்கள் புடை சூழ வந்தார். இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது.

    6வது நீதிமன்றத்தில் ஆஜரான ஜெனீபர் அங்கு நீதிபதியிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், எனது வளர்ப்பு பெற்றோர் மரியபுஷ்பம், ஆண்ட்ரூஸ் மற்றும் அல்போன்ஸ்ராஜ் ஆகிய 3 பேரும் என்னை சினிமாவில் நடிக்க சொல்லி அடித்து கொடுமைப்படுத்தினார்கள்.

    பணம் சம்பாதிக்கும் ஆசையில் தான் அவர்கள் இவ்வாறு செய்தனர். சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. இதற்கு சம்பாதிக்காத என்னை அடித்து உதைத்து தீ வைத்து எரிக்கவும் முயன்றனர். இதனால் தான் அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியேறினேன்.

    என்னை கொடுமைப்படுத்திய பெற்றோர் மரிய புஷ்பம், ஆண்ட்ரூஸ், அல்போன்ஸ் ராஜ் ஆகிய 3 பேர் மீதும் குடும்ப வன்முறை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

    பின்னர் வெளியில் வந்த ஜெனீபர் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வளர்ப்பு பெற்றோர் என்னை கொடுமைப்படுத்தினர். என்னை தவறான வழியில் பயன்படுத்த நினைத்தனர். அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னை யாரும் கடத்தவில்லை. சாதிக் உசேனுக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

    நான் மேஜர். எனவே எனக்கு சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே பெற்றோருடன் செல்ல எனக்கு விருப்பமில்லை. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நான் யோசித்து முடிவு செய்வேன் என்றார்.

    சில மாதங்களுக்கு முன்பு நடிகை ப்ரீத்தி வர்மாவும் இதேபோன்ற பரபரப்பைத்தான் ஏற்படுத்தினார். இப்போது நடன நடிகை ஜெனீபரும் அதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாயுடன் நடிகை டயானா சமரசம்?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X