»   »  துள்ள வரும் கில்லி ஜெனி

துள்ள வரும் கில்லி ஜெனி

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் சின்னப் புள்ளைகளாக வந்தவர்கள் எல்லாம் ஹீரோயின் ஆகும் காலம் இது. அந்த வகையில் கில்லியில் விஜய்யின் தங்கச்சியாக வந்த குண்டு பாப்பா ஜெனீபர் பெரிய ஆளாகி விட்டதால் நாயகி அவதாரம் எடுக்கிறார்.

சின்ன பாப்பாவாக கோலிவுட்டைக் கலக்கிய பல சிறிசுகள் பெருசுகளாக மாறியதும்ஹீரோயின்களாக மாறி அசதத்வது தமிழ் சினிமாவில் புதிதல்ல. பேபியாக இருந்தஷாலினி குமரியானதும் மலையாளம் மற்றும் தமிழிலில் பல படங்களில் நடித்தார்.நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்.பெரிய ரவுண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாலு, தல வீசிய காதல் வலையில்சிக்கி குடும்ப ஸ்தீரியாகி விட்டார்.நந்தாவில் சூர்யாவின் தங்கையாக நடித்த ஷீலா, இப்போது கலக்கல்நாயகியாகியுள்ளார். இளவட்டம் படத்தில் அவர் போட்டுள்ள கும்மாட்டம், குத்தாடடகுமரிகளுக்கே பெரும் பீதியைக் கொடுத்துள்ளது.தெலுங்கில் வெளியாகி விட்ட இளவட்டம், அங்குள்ள இளசுகளின் இதயத்தில் தப்புத்தாளங்களை போட்டு வருகிறதாம். சீக்கிரம் தமிழிலும் தகதகக்க வருகிறதுஇளவட்டம்.

இளவட்டம் படத்தைத் தொடர்ந்து டி.ராஜேந்தரின் வீராசாமி மற்றும் கண்ணா ஆகியபடங்களிலும் தனது கவர்ச்சியை கடை விரித்து கலக்கி வருகிறார் ஷீலா. கிளாமர்காட்டுவதில் எள் என்றால் எண்ணையாக வந்து நிற்கிறாராம் ஷீலா.

அவரது பேரார்வத்தை அறிந்த பல தயாரிப்பாளர்கள் ஷீலா வீட்டை முற்றுகையிட்டுகும்மி அடித்தவண்ணம் இருக்கிறார்களாம்.

இந்த கும் குமரி கிளாமர் நடிப்பில் புது பாதை அமைக்கிறார் என்றால், இன்னொருமுன்னாள் சிறுசான கல்யாணியும், பூர்ணிதா என்ற புதுப் பெயரில் கிளாமர் பாதையிலநடை போட ஆரம்பித்துள்ளார்.

ஆனால் ஷீலா அளவுக்கு இன்னும் திறமை காட்டாததால் பூர்ணிதாவின் வேகம் படுசுமாராகத்தான் இருக்கிறது. இப்போதைக்கு ஷீலாதான் முன்னணியில் இருக்கிறார்.

இளம் நடிகைகளுக்கு போட்டியாக இவரும் கிளாமரில் படு ஆர்வமாக இருக்கிறார்.

இதே வசையில் இன்னொரு முன்னாள் பாப்பாவான ஜெனீபரும்நாயகியாகியுள்ளார். விஜய் நடித்த கில்லி படத்தில் அவரது தங்கச்சியாக டொக்குகண்ணாடியைப் போட்டுக்கொண்டு வந்தாரே அவர்தான் ஜெனீபர்.

அறிந்தும் அறியாமலும் படத்திலும் இந்த பாப்பா நடித்திருந்தார்.இவரது வளர்ச்சியைக் கேள்விப்பட்ட தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ஓடோடி வந்துகால்ஷீட் கேட்டுள்ளாராம். போட்டோ செஷன் முடிந்து விடடதாம்.

விரைவில் ஸ்டில்களை வெளியிட்டு கிடுகிடுக்க வைக்கப் போகிறார்களாம்.அதேபோல பரத் நடிக்கும் ஒரு படத்திற்கும் ஜெனீபரை புக் செய்துள்ளனராம்.மூவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஷீலாதான் எல்லா வகையிலும் கும்மாகதெரிகிறார். மற்றவர்கள் எல்லாம் ஷீலாவின் புயல் வேக கவர்ச்சியை எப்படிசமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் நம்பளோட கவலை!

Read more about: jennifer as heroine
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil