ஜெர்சி பட ரீமேக்கிற்கு தயாராகி வரும் ஷாகித் கபூர்

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கடைசியாக அர்ஜீன் ரெட்டி பட ரீமேக்கில் 'கபீர் சிங்' படத்தில் கியாரா அத்வானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அர்ஜீன் ரெட்டி படம் தான் விஜய் தேவரகொண்டாவை தென்னிந்திய சினிமாவில் மிக பெரிய நடிகர் ஆக்கியது. அந்த பட தமிழ் ரீமேக்கில் தான் தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த அர்ஜீன் ரெட்டி படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைய காரணம் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.

ஷாகித் கபூர் பாலிவுட்டின் மிக நல்ல நடிகர். அவர் ர.ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன் போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்துள்ளார். ஹைடர், உட்தா பஞ்சாப் , பத்மாவத் போன்ற கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் நல்ல கதாபாத்திரங்களை கொண்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கபீர் சிங் படத்தை தொடர்ந்து ஷாகித் கபூர் மற்றொரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அது தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த 'ஜெர்சி' படம்.

Jersy to be remake in hindi and tamil

ஜெர்சி படத்தில் நானி ,ஸ்ரதா ஸ்ரீ நாத் ,சத்தியராஜ் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் கிரிக்கெட்டில் தோற்ற ஒருவனின் வாழ்க்கையை மைய கதையாய் கொண்டு இயக்கபட்ட படம். இந்த படம் நானிக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய அதே இயக்குனர் கௌதம் தின்னுனாரியே ஹிந்தியிலும் இயக்குகிறார். இந்த படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஷாகித் கபூர். அப்போது எடுத்த புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஜெர்சிக்காக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறியிருந்தார். இதன் மூலம் ஹிந்தியிலும் இந்த படத்திற்கு ஜெர்சி என்றே தலைப்பு வைக்கபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு அளவிற்கு ஹிந்தியில் படம் வெற்றி பெறுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்த படம் தமிழிலும் ரீமேக் ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம் . விஷ்ணு இதற்கு முன்பே ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருப்பார். அந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நிஜ வாழ்க்கையிலும் விஷ்ணு ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் இவருக்கு மேலும் ஒரு கிரிக்கெட் படத்தில் நடிப்பது சிரமம் இருக்காது.

கிரிக்கெட் பற்றின கதை என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை எதிர்பார்ப்பு இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X