மம்முட்டி ஓகே.. அவரை விட சின்ன வயசு ஜெயராம் அலர்ஜியா.. "ஜுவல்" மேரி நீங்க செய்தது ஓவர் ஓவர்!
கொச்சி: சரத்குமாருடன் ஜோடி போடவும், விஜயகாந்த்துடன் சேர்ந்து நடிக்கவும் நம்ம ஊர் சூப்பர் நடிகைகள் பலர் மறுத்துள்ளனர். காரணம், அவர்களின் வயதைக் காரணம் காட்டி. அதேசமயம், ரஜினி, கமலுடன் ஜோடி போட அவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. இதே கதை மலையாளத்திலும் அரங்கேறியுள்ளது.
ஜுவல் மேரி ஜுவல் மேரி என்று ஒரு நடிகை மலையாளத்தில் இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகை என்று கூறும் அளவுக்கு பல படங்களில் நடித்தவர் இல்லை. இரண்டே இரண்டு படங்களில்தான் நடித்துள்ளார். அதற்குள் இவர் காட்டும் பந்தாக்கள், போடும் கண்டிஷன்கள் மலையாள திரையுலகினரை ஓ என்று வாய் பிளக்க வைத்துள்ளதாம்.
ஜெயராமுக்கு வயசாகிப் போச்சு, அவருடன் நடித்தால் என் இமேஜ் என்னாவது.. ஸாரி என்று கூறிய மேரியின் அட்டாக்தான் மலையாளத் திரையுலகின் ஹாட்டஸ்ட் பேச்சாக உள்ளது.

டிவியிலிருந்து சினிமாவுக்கு
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஜூவல் மேரி. மழவில் மனோரமா சேனலில் ஆங்கராக இருந்தவர். அந்த டிவி நடத்திய டி 4 டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி பெரும் பிரபலமானவர்.

மம்முட்டியுடன்
இதையடுத்து இவரை சினிமாவுக்கு இழுத்து விட்டனர். மம்முட்டியுடன் இணைந்து உட்டோப்பியிலே ராஜாவு, பதேமாரி ஆகிய படங்களில் நடித்தார் மேரி. பிரபலமானார்.

ஜெயராமுடன் மாட்டேன்
இந்த நிலையில் இவரை ஆடுபுலியாட்டம் என்ற புதிய படத்தில் நடிக்க அழைத்தனர். முதலில் சரி என்று கூறிய அவர் பின்னர் முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம். காரணம் - ஜெயராமுடன் ஜோடி போட வேண்டும் என்று கூறியதால்.

வயசாகிப் போச்சு அவருடன் போயா...!
ஜெயராமுக்கு வயசாகி விட்டது. அவருடன் நடித்தால் எனக்கு இமேஜ் போய் விடும். அவருடன் ஜோடி போட முடியாது. வேண்டுமானால் இளம் நடிகர் பஹத்தை நடிக்க வையுங்கள், நான் ஜோடியாக நடிக்கத் தயார் என்று கூறி விட்டாராம் ஜுவல் மேரி.

கை கொடுத்த ரம்யா கிருஷ்ணன்
கடைசியில் ரம்யா கிருஷ்ணனை அழைத்து வந்து ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க வைத்தனர். மேலும் இந்தி நடிகர் ஓம்பூரியும் உடன் நடித்தார்.

ரொம்பத்தான் குசும்பு
மம்முட்டியை விட வயதில் இளையவர் ஜெயராம். ஆனால் மம்முட்டியுடன் ஜோடி போட்ட மேரிக்கு, ஜெயராமுடன் ஜோடி போட என்ன பிரச்சினை வந்தது என்று மலையாளத் திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.
என்னாவா இருக்கும்...?


Click it and Unblock the Notifications











