ஸ்ரீதேவி மகள் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு காதலர் இருந்தும் அவர் காதலர் தினத்தை தனது தாயுடன் கொண்டாடியுள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பாலிவுட்காரர்கள் அவர்கள் பாணியில் கொண்டாடினார்கள். நடிகை ஸ்ரீதேவியின் மகள் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

அவரும் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவருக்கு காதலர் இருக்கின்றபோதிலும் காதலர் தினத்தை தனது தாயுடன் கொண்டாடியுள்ளார். இதனால் ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள நேரத்தில் காதலருடன் ஊர் சுற்றி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே. இனி காதலரை பார்க்கவே கூடாது என்று ஸ்ரீதேவி தனது மகளுக்கு உத்தரவிட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தான் ஜான்வி தனது தாயுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications