ஜான்வி கபூரின் இதயத்தை தொட்ட படம் தெரியுமா?.. அட இந்த தமிழ் படமா?

சென்னை: ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் ஹிந்தியில் பிஸி ஆர்ட்டிஸ்ட். ஆனால் அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்திருந்த தேவரா படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் விரைவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தனது இதயத்தை தொட்ட படம் குறித்து எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார் ஜான்வி.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு பிறந்த ஜான்வி கபூரும் சக்சஸ்ஃபுல் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

jhanvi kapoor amaran sivakarthikeyan

ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் தெலுங்கில் அவர் அறிமுகமாகியிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேவரா 1 படத்தில் நடித்தார். அந்தப் படம் கலவையான விமர்சனத்தைத்தான் பெற்றது.

அமரன் படம்: இந்நிலையில் அமரன் படம் குறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அமரன் திரைப்படம் எனது இதயத்தை தொட்டதோடு மட்டுமில்லாமல் இதயத்தை உடைக்கவும் செய்துவிட்டது. இந்த ஆண்டில் எனது இதயத்தை உடைத்த படம் என்றால் அது அமரன் மட்டும்தான். அமரன் படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் உணர்ச்சிப்பூர்வமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது" என்றார். முன்னதாக அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உலகளவில் 350 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X