முதல் படத்திலேயே இப்படியா?.. தேவராவுக்கு ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தேவாரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜான்வியின் முதல் தென்னிந்திய படம் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் படமானது நாளை ரிலீஸாகவிருக்கும் சூழலில் தேவரா படத்துக்காக அவர் வாங்கியதாக ஒரு சம்பள தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார். அங்கு சென்றும் தனது திறமையாலும், அழகாலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார். அங்கு அவர் பிஸியாக இருந்தபோதே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி. அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ஜான்வி கபூர்: துபாயில் ஒரு ஹோட்டலில் ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த வருடத்திலேயே ஜான்வி கபூர் தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும்; புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும்வகையில் ஜான்வியின் நடிப்பு அந்தப் படத்தில் பரவலாக பேசப்பட்டது.
அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பான் இந்தியா ஹீரோயின்: ஸ்ரீதேவி எப்படி பான் இந்தியா ஹீரோயினாக கலக்கினாரோ அதேபோல் ஜான்வியும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் இப்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தேவரா 1 படத்தில் நடித்திருக்கிறார். படமானது நாளை வெளியாகவிருக்கிறது.
ஜான்வியின் சம்பளம்: ட்ரெய்லரும் சமீபத்தில் ரிலீஸாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.கண்டிப்பாக இந்தப் படம் வெற்றி பெற்று ஜான்வி தென்னிந்திய திரைத்துறையில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் நடந்த தேவரா ப்ரோமோஷனில் ஜான்வி அழகாக தமிழ் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தேவரா படத்துக்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்காக ஜான்வி ஐந்து கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் படத்துக்கே இவ்வளவு சம்பளமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











