'எனக்குப் போட்டியே அந்த முன்னாள் நடிகையின் மகள்தான்...' அதிரடியாக ஒப்புக்கொண்ட இளம் ஹீரோயின்!

By

மும்பை: தனக்கு சினிமாவில் போட்டியாக இருப்பது, அந்த முன்னாள் நடிகையின் மகள்தான் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார், இளம் ஹீரோயின்.

பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இந்தியில் ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது புரி ஜெகநாத் இயக்கும் படம் மூலம், தெலுங்கு மற்றும் தமிழுக்கும் வர இருக்கிறார்.

ஃபைட்டர்

ஃபைட்டர்

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. முதல் ஷெட்யூல் அங்கு முடிந்துவிட்டது.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

படத்தின் ஷூட்டிங்கின் போது அனன்யா பாண்டேவும், விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தில், முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர், ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக இருந்ததாக செய்திகள் வெளியாயின. பின்னர் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

இந்நிலையில், தனக்கு சினிமாவில் போட்டியாக இருப்பது, நடிகை ஜான்வி கபூர் என்று தெரிவித்துள்ளார் அனன்யா. சினிமா பிரபலங்களின் மகள் என்பதால் வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிடுகிறது என்பது உண்மைதான். இதில் மறைக்க ஏதும் இல்லை. ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் தான் பழகுகிறோம். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

என் தந்தையை நான் பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக திறமையை வளர்க்க வேண்டும். சினிமா பின்னணி இல்லாமல் வந்துள்ள ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா போன்றவர்களையும் சொல்ல வேண்டும். சினிமாவின் எனக்குப் போட்டியாக இருப்பது யார் என்று கேட்கிறார்கள். வேறு யார்? ஜான்வி கபூர்தான் என்று தெரிவித்துள்ளார் அனன்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X