»   »  திவ்யலட்சுமி to

திவ்யலட்சுமி to

Subscribe to Oneindia Tamil

பெயரை மாற்றிக் கொண்ட நேரமோ, என்னவோ கை நிறைய படங்களுடன் படு சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார் தீபு.

தீபு என்ற பெயரில் அன்பு படத்தில் அறிமுகமானவர் தீபிகா. மலையாள மங்கையான தீபு, அன்பு படத்தில் நடிக்க வந்தபோது10வது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். விடுமுறை நாட்களில் நடிக்க வந்த அவரை பள்ளிக் கூடத்திலிருந்து நீக்கி, அவரதுகலைச் சேவைக்கு ஆதரவு கொடுத்தனர் பள்ளி நிர்வாகிகள்.

இதனால் சற்றும் மனம் தளராத தீபு, தொடர்ந்து அன்பு படத்தை நடித்துக் கொடுத்தார். படத்தின் பாடல்கள் பேசப்பட்ட அளவுக்குபடம் பேசப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன தீபு தனியாக பிளஸ் ஒன் படிப்பைத் தொடர்ந்தார். தற்போது பிளஸ்டூவையும் வெற்றிகரமாக முடித்து விட்டார்.


தமிழில் தொடர்ந்து தங்கச்சி கேரக்டராகவே வந்து கொண்டிருக்க, எல்லா வாய்ப்புக்களையும் புறந்தள்ளி வந்தார் தீபு. இதனால்தெலுங்குக்குப் போனார். அங்கு ஹோம்லி முகம் கொண்ட தீபுவை உடை குறைப்பு செய்து தீப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவைத்துவிட்டனர்.

கன்னடத்திலும் அதே கதை தான். ஆனால், போன வேகத்திலேயே தெலுங்கிலும், கன்னடத்திலும் வாய்ப்புக்கள் குறைந்துவிட,இதனால் தமிழிலும் கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்று கூறி ஒரு போட்டோ செசனும் நடத்தி படங்களை கோலிவுட்டில்ரவுண்டுக்கு விட்டுப் பார்த்தத். ஹூஹும் ஒரு சான்சும் கிடைக்கவில்லை.

இதனால் மகளின் எதிர்காலம் குறித்து ரொம்பவே விசனப்பட்ட தாயார், தீபுவின் ஜாதகத்தை நல்ல ஜோசியராகப் பார்த்துகொடுத்து எப்படி இருக்கும் எனது மோளின் எதிர்காலம் என கேட்டுள்ளார்.


பொண்ணுக்கு எல்லாமே நன்றாகத்தான் உள்ளது. ஆனால் பெயர்தான் கொறச்சு சரியில்லை. எனவே பேரை மாத்திக்கலாமேஎன்று கூறியுள்ளார் மிஸ்டர் ஜோசி.

இதையடுத்து பல பெயர்களைர் பரிசீலித்து ஜானவி என்று பெயரை மாற்றினர். இந்தப் பெயர் மாற்றம் நடந்ததன் எதிரொலியாகதீபுவைத் தேடி சில பட வாய்ப்புகள் வந்தன. இதில் நடிப்புக்கும், கிளாமருக்கும் நல்ல வாய்ப்புகள் கொண்ட நான்கு படங்களைத்தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜானவி.

சேரனின் தயாரிப்பில் உருவாகும் அழகாய் இருக்கிறாய், பயமாக இருக்கிறது படத்தில் ஒரு நாயகியாக ஜானவி நடிக்கிறார்.அதேபோல, விக்ராந்த் நடிக்கும் இளமை (இதில் விஜய்யின் அப்பாவும் ஒரு முக்கிய கேரக்டரில், கலக்கல் கெட்டப்பில்நடிக்கிறார், இயக்கமும் அவரே) மற்றும் மது ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் தீபு.


இது தவிர சரத்குமாருக்கு ஜோடியாக (இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக) காக்கி என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படங்கள் மூலம் தமிழில் ஒரு இடத்தைப் பிடிக்காமல் விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் படு இன்வால்வ் ஆக நடித்துவருகிறாராம் ஜானவி.

இன்னொரு விஷயம் தெரியுமோ. தீபுவின் உண்மையான பெயர் அது அல்லவாம். வீட்டில் அவருக்கு வைத்த பெயர்திவ்யலட்சுமியாம். சினிமாவுக்கு வந்தபோது தீபு ஆக்கினார்களாம். இப்போது இவரது தாயாரின் பெயரான ஜானகியைகொஞ்சம்போல மாற்றித் தான் ஜானவி ஆக்கித் தந்துள்ளாராம் ஜோசியர்.

Read more about: jhanvi busy in tamil again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil