ஹீரோயின்
ஏவி.எம் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சூர்யாவுக்கு கோடியாக நடிக்கப் போவது ஜோதிகா என்பதுதெரியும்.
இதில் புதிய செய்தி என்ன தெரியுமா, ஜோதிகாவுக்கு இதில் இரட்டை வேடமாம்.
முதலில் இதில் ஹீரோவாக நடிக்க இருந்தது விக்ரம். ஆனால், அவரது தேதிகள் ஒத்துவராமல் போனதால்சூர்யாவை போட்டுவிட்டார்கள்.
இந்தப் படம் மலையாளத்தில் குஞ்ஞிகூனன் என்ற பெயரில் வெளியாகிசக்கைபோடு போட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
காக்க.. காக்கவுக்குப் பின் ஜோதிகா- சூர்யா ஜோடிக்கு பெரும் மவுசு ஏற்பட்டுவிட்டது.
இதனால் இந்தப் படமும்பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது அவர் கைவசம், கைகொள்ள முடியாத அளவுக்குப் படங்கள்.
விக்ரம் நடிக்கும் அருள் படத்தில்ஹீரோயினாக பெரும் முயற்சி செய்தும் திரிஷா தோற்றுவிட அந்த சான்ஸ் ஜோதிகாவை வீட்டைத் தேடிப்போனது.
அதே போல சிலம்பரசனுடனும் மன்மதன் படத்திலும் ஜோடியாக நடிக்கப் போகிறார்.
இது தவிர பெயர்சூட்டப்படாத 2 படங்களிலும் புக் ஆகியிருக்கிறார்.
இந்தப் படங்கள் மூலம் ஜோதிகா முன்னணிக்கு வந்தாலும்ஆச்சரியமில்லை.
எல்லாவற்றையும் சூர்யாவிடம் கேட்டுவிட்டுத் தான் செய்கிறார் என்பது தனிக் கதை. கதையை சூர்யாவிடம்சொல்லி ஓ.கே. வாங்குகிறார் அதன் பின்னர் தான் அட்வான்சுக்கு கை நீட்டுகிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











