ஹீரோயின்
முதலில் படங்களை ஒப்புக் கொள்ளவே மறுத்து வந்தார் ஜோதிகா. ஆனால், சமீப காலமாக இதனால் வரும்வாய்ப்புக்களை எல்லாம் அள்ளிப் போட ஆரம்பித்துள்ளார் என்று சில வாரங்களுக்கு முன்பே கூறியிருந்தோம்.
இந் நிலையில் சிலம்பரசனுடன் ஜோடி என்று ஒரு வாய்ப்பு வந்தபோது, நானும் சிலம்பரசனும் ஜோடியா?, நெவர்என்று சொல்லி தயாரிப்பாளரைத் திருப்பி அனுப்பினார். ஆனால், அடுத்தடுத்து அவரைச் சந்தித்து கன்வின்ஸ்செய்துவிட்டார்களாம்.
சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸை வாங்கிவிட்டாராம். பார்க்க அக்கா-தம்பிமாதிரி இருப்பார்களே என்று கேட்டால் முறைக்கிறார் புதிய இயக்குனர்.
படத்தின் பெயர் என்ன தெரியுமா.?... மன்மதன்
அது சரி!
இதற்கிடையே சோனியா அகர்வாலுடன் இணைந்து சிலம்பரசன் நடித்து வரும் கோவில் படத்தின் சூட்டிங் படுஸ்பீடாக நடந்து முடிந்திருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரித்த இந்தப் படத்தை இயக்கியுள்ளது சாமி படத்தைஇயக்கிய ஹரி. இரண்டு மாதத்தில் சூட்டிங்கை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
சமீபத்திய தோல்வியான அலைக்குப் பின் கோவில் படத்தைத் தான் சாமி மாதிரி நம்பியிருக்கிறார் சிலம்பு.
காதல் கொண்டேனுக்குப் பின் சோனியா அகர்வாலும் இதில் நிறையவே ஈரக் காட்சிகளில் நடித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











