தமிழரை மணப்பேன்… தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடுவேன்… நமீதா அதிரடி
சென்னை: காங்கிரசில் சேரப்போகிறார்... பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்றெல்லாம் நமீதாவைப் பற்றி செய்திகள் வெளியாகிவருகின்றன. அவரோ இதுவரை யாரும் அழைக்கவில்லை அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.
இப்போதோ தமிழக அரசியல் கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.
தனது அரசியல் ஆர்வம் பற்றியும், எதிர்காலத்திட்டம் பற்றியும் கூறியுள்ளார் நமீதா.

இதுவரைக்கும் இல்லை
எனக்கு திடீரென அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடமே அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்து விட்டேன். இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை. எந்த கட்சியில் சேருவது என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

தமிழக அரசியல்
நான் அரசியலில் குதித்தால் அது தமிழ்நாட்டில்தான். நான் இங்கேதான் வாழ்கிறேன். இங்கேதான் வருமான வரி கட்டுகிறேன். நான் சென்னையில் குடியேறி பத்து வருடமாகிவிட்டது.

நான் சென்னைப் பெண்தான்
என் வீட்டு விலாசம், பாஸ்போர்ட் விலாசம் எல்லாம் சென்னைதான். எனவே நான் வடஇந்திய பெண் இல்லை. சென்னை பெண்தான். அதனால் அரசியலில் குதித்தால் மாநில கட்சியில் சேர்ந்து இங்குதான் அரசியல் பண்ணுவேன்.

பாஜகவில் சேரலை
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டாக வந்த செய்திகள் உண்மை இல்லை. தமிழக அரசியல் கட்சிகளின் மீதுதான் அதிக ஈடுபாடு உண்டு

சென்னையில் செட்டில்
ஒரு தென்னிந்தியரை திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே வாழ்வதுதான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார் நமீதா.


Click it and Unblock the Notifications











