ஆத்தி.. சட்டையை கழட்டி.. ஜொனிதா வெளியிட்ட போல்டான வீடியோ.. ஸ்தம்பித்துப்போன சோஷியல் மீடியா!
சென்னை: ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஜொனிதா காந்தி.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹை வே, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களைப் பாடத் தொடங்கிய ஜெனிதா காந்தி ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். சூர்யா நடித்த 24 படத்தில் இடம்பெற்ற "மெய் நிகரா" பாடலையும் இவர்தான் பாடினார்.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் படத்தில் இடம் பெற்ற "இறைவா" பாடலைப் பாடி அசத்திய ஜொனிதா காந்தி கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜவான் எனத் தொடர்ந்து அனிருத் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகம்: ஓகே கண்மணி, 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, சர்க்கார், 99 சாங்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜொனிதா காந்தி பாடியுள்ளார். இசைப் புயலைத் தொடர்ந்து ராக்ஸ்டார் இசையிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடி இருக்கிறார். ஒரே நேரத்தில் ஒன்பது மொழிகளில் பாடக்கூடிய திறமை கொண்டவர் ஜொனிதா காந்தி.
அனிருத்துடன் கிசுகிசு: டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடலை அனிருத் உடன் இணைந்து ஜொனிதா பாடி நடனமாடிய நிலையில், அடுத்ததாக பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பாடி நடனம் ஆடினார்கள். லிரிக் வீடியோவை இவர்களுக்கான ஆல்பம் வீடியோவாக மாறிய நிலையில் இருவரும் காதலித்து வருகிறார்களா என்ற கிசுகிசுக்கள் கிளம்பின.
சட்டையை கழட்டி: ஒரே ஒரு வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் தீமில் பாடல் பாடிய வீடியோவையும் கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொனிதா காந்தி வெளியிட்டு இணைய வாசிகளை வசீகரித்து வருகிறார்.
எல்லைமீறிய போல்ட்னஸ்: கால் சட்டை ஏதும் அணியாமல் மொத்த தொடையழகையும் காட்டியபடி ஜொனிதா காந்தி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வண்ணம் உள்ளன. அவர் புதிதாக பாடியுள்ள 'Tu Jaane' பாடலை பாடிய படியே வீடியோவும் வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். 34 வயதாகும் ஜொனிதா காந்தி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக செம அழகாக உள்ள நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை இவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











