ஹீரோயின்
ஜோதிகா சொந்தப் படம் எடுக்கப் போகிறார். அவருடன் அக்கா நக்மாவும் சேர்ந்து இந்தப் படத்தை எடுக்கிறார்கள்.
நிறைய விவாதத்திற்குப் பின் சொந்தப் படம் எடுப்பது என்ற முடிவுக்கு சகோதரிகள் வந்திருக்கிறார்கள். முதலில் படம்எடுக்கும் யோசனையை எதிர்த்துள்ளார் ஜோதிகா. ஆனால், நக்மாவின் தொடர் வற்புறுத்தலால் படம் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
படத்தை இயக்கப் போவது யார் என்பதில் கொஞ்சம் சிக்கல் எழுந்துள்ளது. வாலி டைரக்டர் சூர்யாவை இயக்கச்சொல்லலாம் என்று ஜோதிகா சொல்லியிருக்கிறாராம்.
ஆனால் 12பி பட டைரக்டர் ஜீவாவை பரிந்துரை செய்துள்ளாராம் நக்மா. இருவரும் சேர்ந்து குலுக்குச் சீட்டுப்போட்டு டைரக்டரைத் தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது.
Comments


Click it and Unblock the Notifications