»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டார்கள் கோடம்பாக்கத்து ஹீரோக்கள்.

வாலியில் பிட் ரோலில் வந்த ஜோதிகா, இன்றைய தேதியில் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது ஹீரோக்களையும் கூட அலை பாய வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், உச்சத்திற்கு வந்தவுடன் ஜோதிகாவின் சேஷ்டைகளும் அதிகமாகி விட்டதாம்.

துவக்கத்தில், தனக்கு அதிக படங்கள் கிடைக்க வேண்டும் என்பதால் ஹீரோக்கள், டைரக்டர்கள், தயாப்பாளர்கள், ஏன் ஒளிப்பதிவாளர்களையும் மிகமரியாதையாக நடத்திய ஜோதிகா இப்போது இஷ்டத்திற்கு இவர்களை ஆட்டிப் படைக்கிறாராம்.

தனக்குப் பிடிக்காத ஹீரோ இருந்தால் ஷூட்டிங்கிற்கு சரியாக வராமல் சொதப்புகிறாராம். டைரக்டரிடம், இப்படி ஷாட் வையுங்கள், ஹீரோவைஅதிகமாக கட்டிப் பிடிக்காத வகையில் சீன்கள் வையுங்கள் என்று உத்தரவிடுகிறாராம்.

அது கூட பரவாயில்லையாம். புதுமுகமாக இருந்தாலும் பரவாயில்லை, வயதான ஹீரோக்கள் வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாக கூறி விடுகிறார்.

ஷாம், மாதவன் என இளைய முகங்களின் படங்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு கால்ஷீட் தந்து விடுகிறாராம்.

அஜீத், விஜய் படங்களைக் கூட ஆவாய்ட் செய்ய ஆரம்பித்துள்ளது தான் தயாரிபபாளர்களை மிகவும் எரிச்சல்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சம்பளமும் படத்துக்குப் படம் கூட்டிக் கொண்டே போகிறார்.

சமீபத்தில் தனது படத்தில் ஜோதிகாவை புக் செய்ய நினைத்த மூத்த ஹீரோ ஒருவர் (திரையுலகில் முக்கியப் பொறுப்பில் அவர் இருக்கிறார்) கடும்கெஞ்சலுக்குப் பிறகே ஜோதிகாவை அடைய முடிந்தது. (ஹீரோயினாகத்தான் சார்!).

அப்பவும் கூட, செமத்தியான சம்பளத்திற்கு ஒத்துக் கொண்ட பிறகுதான் ஒ.கே. சொன்னாராம் ஜோ.

இதனால் வெறுப்படைந்துள்ள சில மூத்த ஹீரோக்களும், டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் ஜோதிகாவை புறக்கணிப்பது என்ற முடிவுக்குவந்துள்ளார்களாம்.

ஜோதிகாவுக்குப் பதில் சினேகாவை பெரிய ஆளாக்கி விடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக ஜோதிகாவை புக் செய்திருந்த ஒரு பட நிறுவனம் அவரை நீக்கிவிட்டு சினேகாவை புக் செய்துள்ளது. இனி இது தொடருமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil