»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவின் (செல்லமாக "ஜோ") சம்பளம் வானைத் தொடும் தூரத்திற்கு சென்று விட்டது தெரிந்ததுதான். ஆனால்சம்பளம் உயர்ந்தவுடன் படங்களின் எண்ணிக்கை படுபயங்கரமாகக் குறையத் தொடங்கி விட்டதை உணர்ந்தார்ஜோ.

படங்கள் குறைந்தாலும் கூட தனது சம்பளத்தைக் குறைப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்தார் ஜோ.இந்நிலையில் திடீர் ஞானோதயம் ஏற்படவே, மீண்டும் சம்பளத்தைக் குறைத்து விட்டதாக தயாரிப்பாளர்களுக்குஅவர் ஓலை அனுப்பினார்.

இந்நிலையில் அஜீத் நடிக்க, செரீன் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் "ராஜா" படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்ஜோ. இதற்காக அவருக்கு ரூ.45 லட்சம் வரை சம்பளம் பேசியுள்ளார்களாம்.

முதலில் ஜோ கேட்ட சம்பளம் பிரசாந்த் ரேஞ்சுக்கு இருந்ததாம். அதன் பிறகு படிப்படியாக பேசி 45ல் கொண்டுவந்து நிறுத்தினார்களாம்.

இருந்தாலும், இன்னும் கொஞ்சம் ஜோ இறங்கி வந்தால் நன்றாக இருக்கும் என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்களாம் செரீனா மூவி மேக்கர்ஸ்.

Please Wait while comments are loading...