»   »  சுறுசுறுப்பாகிறார் ஜோதிகா

சுறுசுறுப்பாகிறார் ஜோதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியில் ரஜினியுடன் நடித்த அதிர்ஷ்டத்தால் ஜோதிகாவுக்கு கமல், சிரஞ்சீவி விக்ரம் என முக்கிய நடிகர்களுடன் சேர்ந்துநடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

தமிழில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்கும் ஒரு தீராத ஆவல் இருக்கும். அது என்னவென்றால் சூப்பர் ஸ்டாருடன் ஒருபடத்திலாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்பது தான்.

ஜோதிகாவுக்கு மட்டும் இந்த ஆவல் இல்லாமல் இருக்குமா என்ன? ரஜினியுடன் சந்திரமுகியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஆனால் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சந்திரமுகியில் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்த ஒன்று போதாதா ஜோதிகாவுக்கு? ரசிகர்களின் பாராட்டு மழையில் திக்குமுக்காடிப் போய்விட்டார் நம்ம ஜோ. ரஜினியின்படத்தில் நடித்த யாரும் இதுவரை இந்த அளவிற்கு பெயர் வாங்கியதில்லை என்று கூறுகிறார்கள்.

பாபாவின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் ரஜினிக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளதால் ரஜினிக்கு அடுத்தபடியாகஜோதிகாவும் படு உற்சாகமாக இருக்கிறார்.

ஜோதிகாவின் இந்த உற்சாகத்திற்கு வேறு காரணமும் இருக்கிறது. ரஜினியுடன் நடித்த அதிர்ஷ்டமோ, என்னவோ.. கமல், சிரஞ்சீவிஎன பெரிய தலைகளின் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கமலுடன் "வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தவிர தெலுங்கு சூப்பர் ஸ்டார்சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது மட்டுமா..? விக்ரமுடன் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இது ஒருபுறமிருக்க, இப்போதெல்லாம் ஜோதிகா யாருடனும் அதிகமாக கலகலப்பாக பேசுவது கிடையாதாம். (சூர்யா ஞாபகம்பாடாய்படுத்துகிறதோ..!) உடல் எடையையும் குறைத்து விட்டார்.

வேறு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் நம்ம ரசிகர்களுக்காக தான். நிறைய புதுமுகங்கள் கோலிவுட்டை நோக்கி தினமும்படையெடுத்து வருவதால் அவங்களை சமாளிக்க வேண்டாமா? அதற்காக தான் ஸ்லிம்மாக முயற்சிக்கிறாராம்.

பார்த்தும்மா.. உங்க டிரேட் மார்க் தொப்பை குறைந்து விடப்போகிறது..!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil