ஜோதிகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்!

சுதந்திர தினத்தையொட்டி ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள காற்றின் மொழி படத்தின் போஸ்டரில், பெண்கள் செய்ய வேண்டிய 10 கட்டளைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின்மொழி. இந்தி வெளிவந்த துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக் இது. இதில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக விதார்த் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை ஒட்டி காற்றின் மொழி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்கள் சுதந்திரமாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 10 கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிடித்ததை அணி:

பிடித்ததை அணி:

அவற்றில் முதலாவதாக, ‘உனக்குப் பிடித்த உடையை நீ அணிந்து கொள்' என்பது தரப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் முதலாவதாக அவர்களது உடைகள் தான் இடம் பெறுகின்றன.

பாலியல் வன்முறைகள்:

பாலியல் வன்முறைகள்:

அரைகுறை ஆடைகளாலேயே அவர்கள் ஆண்களின் மனதை சீரழிப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பெண்களின் ஆடைகள் மீதான விமர்சனம் அதிகமாக காணப்படுகிறது. எனவே உன் மனதிற்குப் பிடித்த ஆடையை உடுத்து என்கிறது இந்த போஸ்டர்.

மறுகன்னத்தைக் காட்டாதே:

மறுகன்னத்தைக் காட்டாதே:

அடுத்ததாக, ‘உனக்குப் பசித்தால் நீயே முதலில் சாப்பிடுவாயா, உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டாதிருப்பாயாக, நீ விரும்பியதை செய்வாயாக, குண்டாக இருக்க விரும்பினால் குண்டாக இருப்பாயாக, வீட்டுப் பணிகளில் உன் கணவரையும் பங்கெடுக்கச் செய்வாயாக,

விருப்பம் போல் செலவு செய்:

விருப்பம் போல் செலவு செய்:

நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக, நீ விரும்பாத போது வற்புறுத்தலுக்கு சம்மதியாமல் இருப்பாயாக, மனதில் பட்டதை செய்வாயாக, ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக' என அந்த 10 கட்டளைகள் முடிகின்றன.

இடி, மின்னலுடன் ஜோதிகா:

இடி, மின்னலுடன் ஜோதிகா:

இந்தப் போஸ்டரில் இடி, மின்னல் பின்னணியில் இருக்க ஆவேசமான அதே சமயத்தில் தெளிவான முகத்துடன் ஜோதிகா நிற்பது போன்று உள்ளது. இவற்றின் மூலம் திருமணத்திற்குப் பின் அவர் நடித்து வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களைப் போலவே இப்படத்திலும் அவர் பெண்கள் உரிமையைப் பற்றி உரக்கப் பேசப் போகிறார் என்பது தெளிவாகிறது.

ராதாமோகன் - ஜோதிகா:

ராதாமோகன் - ஜோதிகா:

இப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி ரிலீசாக இருக்கிறது. மாபெரும் வெற்றி பெற்ற மொழி படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் - ஜோதிகா கூட்டணியில் வெளியாகும் படம் இது என்பதால், படம் குறித்தான எதிர்பார்ப்பு இப்போதே எகிறிக் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X