ஹீரோயின்
விரைவிலேயே மெட்ராசுக்கு கும்பிடு போட்டுவிடும் மூடுக்கு வந்துவிட்டார் ஜோதிகா.
இவருக்கு இப்போது கையில் படங்கள் இல்லை. ஒன்றிரண்டு படங்களை வைத்துத்தான் ஓட்டி வருகிறார். சம்பளத்தைஎவ்வளவோ குறைத்தும் கூட பலனளிக்கவில்லை.
இதனால் அக்கா நக்மாவைப் போலவே மும்பை சென்று நிரந்தரமாக செட்டிலாகி விடும் ஐடியாவில் இருக்கிறாராம். ஆனால்இப்போதைக்குக் கல்யாணம் எல்லாம் கிடையாதாம்.
கிட்டத்தட்ட தமிழ சினிமாவுக்கு டாடா காட்டிவிடும் இதே மூடுக்கு வந்துவிட்ட இன்னொரு நடிகை லைலா. விரைவிலேயேஇவரும் மும்பை சென்று விட முடிவு செய்துவிட்டாராம். சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்காததால் பல பட வாய்ப்புகளைஇழந்துவிட்டார் லைலா.
முதலில் ஜோதிகாவைத் தொடர்ந்து விரைவிலேயே நிரந்தரமாக கோடம்பாக்கத்திற்குக் குட்பை சொல்லப் போகிறாராம் லைலா.
இரண்டு நிலவுகள்
இருளில் மறைகின்றன
கோடம்பாக்கத்தில் அமாவாசை
- கோலிவுட் கவிராயர்.


Click it and Unblock the Notifications











