»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவுக்கும், ஜோதிகாவுக்கும் அதிக படங்களைப் பிடிப்பதில் பெரும் மோதலே நடந்து கொண்டுள்ளது.

ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் திரையுலகில் அவ்வப்போது ஹீரோயின்களும் ஆதிக்கம் செலுத்துவதுஅபூர்வமாக நடக்கும். கொஞ்ச காலத்திற்கு முன் சிம்ரன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் ஜோதிகாமுன்னுக்கு வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

இன்று வரையிலும் ஜோதிகாதான் நம்பர் ஒன் ஹீரோயினாக உள்ளார். ஆனால், சூர்யாவுடனான காதலால்,விரைவிலேயே டும் டும் கொட்ட முடிவெடுத்து வந்த வாய்ப்புக்களை எல்லாம் தட்டிக் கழித்து அவர் ஒதுங்க,அந்த இடத்தை த்ரிஷா பிடித்தார்.

இடையில் என்ன நடந்தததோ, விறுவிறுவென மீண்டும் அட்வான்ஸ்களை வாங்கிப் போட ஆரம்பித்தார் ஜோதிகா.சிவக்குமார் தரப்பில் காதலுக்கு பச்சைக் கொடி கிடைக்காததால் அதுவரை நடிப்பதைத் தொடரலாம் என சூர்யாவும்சொல்லிவிட்டதால் மீண்டும் நடிப்பில் ஜோதிகா கவனம் செலுத்த, வாய்ப்புக்கள் குவிந்துவிட்டன.

அதே நேரத்தில் சாமிக்குப் பிறகு வந்த படங்கள் ஏதும் கை கொடுக்காதததால் த்ரிஷா தெலுங்குக்குப் போனார்.அங்கு முழுவதுமாக உடைகளை உரித்து எடுத்து த்ரிஷாவையே செக்ஸ் பாம் ஆக்கிவிட்டார்கள்.

வர்ஷம் படத்தில் மழை சீனில் த்ரிஷா காட்டிய காட்டை பார்த்துவிட்டு அடுத்த படங்களிலும் அவரை வெறும்ஜாக்கெட்டோடு நடிக்க வற்புறுத்த, அதைத் தவிர்க்க சம்பளத்தை த்ரிஷா அதிகமாகக் கேட்டுள்ளார்.

இதையடுத்து பேசிய தொகையைவிட ரூ. 5 லட்சம் வரை அதிகமாகத் தூக்கித் தந்த தெலுங்குத்தயாரிப்பாளர்கள் காசைக் கூட்டிவிட்டு உடைகளை குறைத்துக் கொண்டே போக நிலைமை மோசமாகப்போனதையடுத்து தெலுங்குக்கு கும்பிடு போட்டுவிட்டு மீண்டும் தமிழுக்கு திரும்பி வந்துள்ளார் த்ரிஷா.

வந்த வேகத்தில் அவர் செய்து வரும் காரியம், ஜோதிகாவை புக் செய்யும் தயாரிப்பாளர்களை நேரில் போய்பார்த்து தனக்கு சான்ஸ் கேட்பது தான். இதனால் த்ரிஷாவுக்கும் 3 படங்கள் கிடைத்துள்ளன.

இருந்தாலும், ஜோதிகாவை அவர் நெருங்க முடியவில்லை. ஒரு காலத்தில் பப்ளிமாஸாக இருந்த ஜோதிகாஇப்போது சிக் ஆகி முன்பை விட அட்டகாசமான பொலிவுடனும், அழகுடனும் காணப்படுகிறார். அவர் வசம்இப்போது 6க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் உள்ளன.

த்ரிஷாவுக்கு ஆய்த எழுத்தோடு விஜய்யுடன் கில்லி படமும் கிடைத்துவிட்டது. இது தவிர முன்பே புக் ஆனஅஜீத்தின் ஜீ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும், தான் பெரிதும் எதிர்பார்த்த அருள் படம் ஜோதிகாவுக்குப் போய்விட்டதில் பெரும் வருத்தத்தில்இருக்கும் த்ரிஷா, எப்படியாவது அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடி சேர முடியுமா என்று கடுமையாகமுயற்சித்து வருகிறார்.

அத்தோடு ஜோதிகாவை நாடும் இயக்குனர்களையும் விடாமல் போன் போட்டு துரத்திக் கொண்டிருக்கிறார்.இதைத் தெரிந்து கொண்ட ஜோதிகாவும் சும்மா இல்லை, தனது ரேட்டை அதிரடியாகக் குறைத்துக்கொள்ளவும் முன் வந்துள்ளார் (ஒரு படத்துக்கு இவர் ரூ. 40 லகரம் வாங்குகிறார்). இதையடுத்து த்ரிஷாவாஜோதிகாவா என்று போட்டி வந்தால் ஜோதிகா பக்கமே வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தமிழில் கவனம் செலுத்துவதற்காக தெலுங்கை த்ரிஷா தவிர்த்தாலும் அவரை தெலுக்குக்காரர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஆட்டோகிராப் படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர்ஒருவர், தமிழில் கனிகா செய்த ரோலை செய்ய வருமாறு த்ரிஷா வளைத்துவிட்டார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கண்டிசனோடு அதில் நடிக்கப் போகிறார்.

அதே போல பிரபு தேவா தான் இயக்கப் போகும் முதல் தெலுங்குப் படத்திலும் த்ரிஷாவே நடிக்கவேண்டும் என்று அனத்தி வருகிறார். பிரபுதேவா என்றாலே உடைகளை உரிப்பதற்கு முக்கியத்துவம்தருவாறே என்று பயந்து போய் இருக்கும் த்ரிஷா, கொஞ்சமாய் தான் கவர்ச்சி காட்டுவேன் என்றகண்டிசனோடு அட்வான்ஸை வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வர்ஷம் படத்தை தமிழில் எடுக்கப் போகிறார்கள். இதில் ஹீரோ ஜெயம் ரவி என்றுமுடிவாகிவிட்டது. ஹீரோயினாக த்ரிஷாவையே போட்டு கவர்ச்சியில் இறக்கிவிடலாமா என்றுயோசிக்கிறார்களாம். அவர் அந்த ரோலை ஏற்பாரா என்று தெரியவில்லை. த்ரிஷா பாவம் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil