»   »  சத்யராஜை பாராட்டிய ஜோதிகா

சத்யராஜை பாராட்டிய ஜோதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கிலீஷ்காரன் படத்தில் சத்யராஜின் "லக்கலக்க.. சந்திரமுகி வேடத்தை பார்த்த ஜோதிகா, உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டுசத்யராஜை பாராட்டினாராம்.

சந்திரமுகி வந்தாலும் வந்தது, தமிழ்நாட்டில் இப்போது அனைவரின் வாயும் முணுமுணுப்பது ஜோதிகாவின் லக்கலக்க டயலாக்கைத் தான்.இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஜோதிகாவின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவ்வப்போது பரபரப்பாக இருக்கும் விஷயங்களை அப்படியே அமுக்கிப் போட்டு காசாக்குவது தானே சினிமாக்காரர்களின் தந்திரம்.இதே தந்திரத்தை தான் இங்கிலீஷ்காரன் படத்தின் டைரக்டர் ஷக்தி சிதம்பரமும் கடைப்பிடித்துள்ளார்.

சமீபத்தில் சந்திரமுகி படத்தை பார்த்த ஷக்தி சிதம்பரம், அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் ஜோதிகாவுக்கு பேய் பிடிக்குமே, அதே போலதன்னுடைய படத்திலும் ஒரு காட்சியை வைக்க தீர்மானித்தார்.

ஏற்கனவே வேறு மாதிரியாக யோசித்து வைத்திருந்த காட்சியை மாற்றி சத்யராஜுக்கு பேய் பிடிப்பது போலவும், அவர் லக்கலக்க என்றுகூச்சலிட்டு ஓடுவது போலவும் காட்சிகளை அமைத்து சுட்டுத் தள்ளிவிட்டார்.

ஜோதிகா போலவே சத்யராஜுக்கும் மேக்கப் போட்டு அசத்தி விட்டார். சத்யராஜுடன் சேர்ந்து அந்தக் காட்சியில் வடிவேலுவும் ரகளைசெய்துள்ளாராம். இந்த ஒரு வேடத்திற்காகவே படம் நிச்சயம் ஓடும் என்கிறார் ஷக்தி சிதம்பரம்.

இந்தப் படத்தில் சத்யராஜ் போட்ட சந்திரமுகி பெண் வேடத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாயின. இதைப் பார்த்த ஒரிஜினல் லக்கலக்கஜோதிகாவே அசந்து விட்டாராம். சத்யராஜின் பெண் வேடத்தை பார்த்து அவர் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

உடனடியாக சத்யராஜை அவரது செல்போனில் தொடர்பு கொண்டு, பொம்பள வேஷம் உங்களுக்கு சூப்பராக இருக்கிறது என்றுபாராட்டினாராம். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சத்யராஜ் போனிலேயே லக்கலக்க என்று கூறி ஜோவை மேலும் சிரிக்க வைத்தாராம்.

மகாநடிகனில் அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் ஒரு பிடிபிடித்த சத்யராஜ், இங்கிலீஷ்காரனில் ஆங்கிலத்தை ஆதரிப்பவர்களையும்,எதிர்ப்பவர்களையும் சேர்த்துப் பிடித்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil