»   »  அம்மன் வேடத்திற்கு ஜோதிகா "நோ" !

அம்மன் வேடத்திற்கு ஜோதிகா "நோ" !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியில் ஆங்காரம் காட்டி நடித்தாலும் நடித்தார், உடனே ஜோதிகாவைத் தேடி அம்மன் வேடத்தில் நடிக்க வர்ரீகளா என்று கேட்டு தயாரிப்பாளர்கள்படையெடுத்து வரத் தொடங்கி விட்டார்களாம்.

தமிழ் சினிமாவும், அம்மன் வேடமும் பிரிக்க முடியாத ஒன்று. அந்தக் காலம் தொட்டு இந்த கம்ப்யூட்டர் காலம் வரை அம்மன் வேடத்தில் ஏதாவதுஒரு படம் அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளது.

முன்பெல்லாம் அம்மன் வேடமா, கூப்பிடு கே.ஆர்.விஜயாவை என்று கூறும் அளவுக்கு கே.ஆர்.விஜயா அம்மன் வேடங்களில் கலக்கி வந்தார். பிறகுமீனா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அம்மன் வேடங்களில் நடித்து அசத்தினர்.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் நொந்து போகும் அளவுக்கு, கிராபிக்ஸை வைத்து அம்மனை "என்னவெல்லாமாஜிம்மிக்ஸ்" செய்ய வைத்தனர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்.

கிராபிக்ஸை படத்தில் புகுத்தி வித்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே, பாளையத்து அம்மன், தாலி காத்த காளியம்மன் என்றபலவித பெயர்களில் படங்கள் வந்தன.

இப்போதைய நடிகைகளில் அம்மன் வேடத்தில் யாருமே நடித்ததில்லை, எல்லோரும் அம்மனாக நடிப்பதை விட "அரை குறைஅம்மணமாக" நடிக்கவே அதிகம் ஆசைப்படுவதால், அம்மன் படமும் வருவதில்லை, அம்மன் வேடத்திற்கும் நடிக்க ஆள்இல்லை.

சமீபத்தில் வெளியாகி படு ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகியில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து பரவசப்பட்ட சிலதயாரிப்பாளர்கள், ஆஹா, புது அம்மன் கெடச்சுட்டாருய்யா என்று பணப்பெட்டியுடன் ஜோதிகாவைத் தேடி ஓடியுள்ளார்கள்.

ஜோதிகாம்மா, நாங்க ஒரு அம்மன் படம் எடுக்கிறோம். அதில் நீங்கள்தான் அம்மனாக நடிக்க வேண்டும். சந்திரமுகி கடைசிக்காட்சியில் பின்னி எடுத்துட்டீங்க, அம்மன் வேடம் உங்களுக்கு அட்டகாசமாக பொருந்தும், நடிக்க வர்றீகளா என்று கேட்டுஜோவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.

இதென்னடா வம்பாப் போச்சு என்று குழம்பிப் போன ஜோதிகா, சாரிங்க, இப்போதைக்கு அம்மன் படங்களில் நடிக்கும் திட்டம்என்னிடம் இல்லை, கமல் படத்தில் பிசியாக இருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம் என்று கூறி பார்ட்டிகளை திருப்பி அனுப்பிவைத்து வருகிறாராம். ஜோதிகா அம்மனின் இந்தப் பதிலால், ஏமாந்து போன தயாரிப்பாளர்கள், கண்டிப்பா அப்புறம் நடிச்சுக்கொடுக்கனும் என்று ஜோவிடம் கூறி விட்டு நடையைக் கட்டியுள்ளார்களாம்.

கண்ணைக் கொஞ்சம் உருட்டி நடிச்சுறக் கூடாதே, உடனே அம்மனாக்கிருவாங்கப்பா நம்ம தயாரிப்பாளர்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil