»   »  ரம்பாவுக்கு ஜோ சொன்ன "நோ!

ரம்பாவுக்கு ஜோ சொன்ன "நோ!

Subscribe to Oneindia Tamil

ரம்பா பணப் பிரச்சினையில் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டுள்ளாராம். ஆபத்துக்கு உதவி கேட்டு அவர் ஜோதிகாவிடம் போக,அவரோ நோ சொல்லி விட்டாராம்.

ஒரு காலத்தில் ரம்பாவும், அவரது "தொடையும்" படு கிரேசியாக பேசப்பட்டனர். தனது "சொத்தை" ரம்பா இன்ஷ்யூர் செய்துவைத்துள்ளார் என்று கூட புரளியைக் கிளப்பி விட்டார்கள். அப்படிப்பட்ட ரம்பா இப்போது ரொம்பவே நொந்துபோய்நொம்பலத்தில் உள்ளார்.

நடித்து, ஆடிப் பாடி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தைப் போட்டு த்ரீ ரோஸஸ் என்ற தேவையில்லாத ஒரு படத்தை ரொம்பவேகமாக தயாரித்தார் ரம்பா. படம் பாதியிலேயே பைனான்ஸ் பிரச்சினையால் தள்ளாட ஆரம்பிக்கவே, ஆத்ம நிம்பர்கோவிந்தாவை அணுகி அவடமிருந்து பைனான்ஸ் பெற்று படத்தை டித்தார்.

இந்தப் படத்திற்காக ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கி வைத்திருந்தார் ரம்பா. இப்போது கடன் கொடுத்தவர்கள் ஏகத்திற்கும்நெருக்குவதாக கேள்வி. இதனால் வெளியில் தலை காட்டவே முடியாத அளவுக்கு வீட்டோடு முடங்கியுள்ளாராம் ரம்பா.

த்ரீ ரோஸஸ் படத்தில் ரம்பாவுடன் சேர்ந்து நடித்த ஜோதிகாவுக்கும், லைலாவுக்கும், பெரிய சம்பளத்தைக் கொடுத்து படத்தைஎடுத்ததுத் தான் இந்த அளவுக்கு ரம்பாவுக்கு பிரச்சினையாகி உள்ளதாம். அவர்கள் இருவருக்கும் கொடுத்த சம்பளத்தைக்கொண்டு குட்டி பட்ஜெட்டில் ஒரு படமே தயாரித்து விடலாம். அந்த அளவுக்கு சம்பளத்தை வாரிக் கொட்டியிருந்தார் ரம்பா.

இப்போது தான் மிகவும் கஷ்டப்படுவதால் ஏதாவது உதவி செய்யுமாறு ஜோதிகாவை அணுகியுள்ளார் ரம்பா. ஆனால் ஸாரி,என்னால் உதவ முடியாது என்று சிம்பிளாக கூறி கழன்று கொண்டு விட்டாராம் ஜோதிகா. இதனால் அப்செட் ஆகி விரக்தியில்மூழ்கியுள்ளாராம் ரம்பா.

படம் தயாரிப்பில் இருந்தபோது, சம்பளப் பாக்கிக்காக ஷூட்டிங்குக்கே வராமல் இழுத்தடித்தார் ஜோதிகா. சம்பள விஷயத்தில்அவ்வளவு கறாராக இருந்த அவர், அந்தப் படம் தோல்வியடைந்து, நான் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கும்போது, மனிதாபிமானஅடிப்படையில் கூட எனக்கு உதவ முன் வரவில்லையே என்று கூறி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் ரம்பா.

ஜோதிகாவுக்குத் தான் இந்தப் படத்தில் நிறைய சம்பளம் கொடுத்தேன். அவரால் தான் எனக்கு இவ்வளவு நஷ்டம். இருந்தும்என்னுடைய நிலையைக் கண்டு கொஞ்சம் கூட அவர் இரங்கவில்லையே என்று வேதனைப்பட்டாராம் ரம்பா.

கோலிவுட் "நட்பை" இப்போதாவது ரம்பா புரிந்து கொண்டால் சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil