»   »  மலிவு விலை ஜோதிர்மயி!

மலிவு விலை ஜோதிர்மயி!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவிலேயே ரொம்பவும் மலிவான ரேட் கொண்டவர் ஜோதிர் மயிதானாம்.

கேரளத்து வாழைக்காய் ஜோதிர்மயி. நடிக்க வருவதற்கு முன்பே கண்ணாலம் கட்டிக்கொண்ட குடும்ப ஸ்திரீ ஆவார். ஆனால் தனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றுஅறிவித்தபடிதான் வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆனால் கேரளத்து பத்திரிகைகள் எல்லாம் ஜோதிர் மணாளன் குறித்த தகவல்களைபிட்டுப் பிட்டு வைத்த பிறகு தனது கல்யாணப் பேச்சை நிறுத்திக் கொண்டார் ஜோதிர்.

ஜோதிரின் ஆத்துக்காரர் பெயர் சஞ்சய் பாபியாம். இருவரும் இணைந்து வாழ்வதாகஒரு செய்தியும், கல்யாணத்திற்குப் பிறகு பிரிந்து விட்டனர் என இன்னொருசெய்தியும் உலா வருகிறது. எது எப்படியோ ஜோதிர் கன்னி அல்ல, முதிர் கன்னிஎன்பது மட்டும் இப்போதைக்கு கன்பார்ம்ட்!

இளம் நடிகைகள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஜோதிரும்சளைக்காமல் அடுத்தடுத்து படம் கிடைத்து கலக்கிக் கொண்டிருப்பதுதான்ஹீரோயின்களை பொறாமைப்பட வைக்கும் விஷயமாகும். தலைநகரம் படத்தில்சுந்தர்.சியுடன் பின்னிப் பிணைந்து நடித்து, குஷ்புவுக்கே குமுறலை ஏற்படுத்தியவர்ஜோதிர்.

அடுத்த விஜயகாந்த்துடன் சபரி படத்தில் ஜோடி போட்டுள்ளார். அதேபோலசத்யராஜுடன் பெரியார் படத்திலும் திறமை காட்டி வருகிறார். ஜோதிரின் இந்தவேகமான வளர்ச்சியின் ரகசியம் ரொம்ப சிம்பிள் என்கிறார்கள் விஷயம்தெரிந்தவர்கள்.

அனுசரணையாக நடந்து கொள்வது, சம்பளம் குறித்து அதிகம் டிமாண்ட் செய்யாதது,நன்கு ஒத்துழைப்பு என சகலவித சமாச்சாரங்களிலும் ஜோதிர் படு இளக்கமாக நடந்துகொள்கிறாராம். இதனால்தான் அவருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகிறதாம்.

ஜோதிரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 5 லட்சம்தான். ஜோதிரின் சமர்த்தானநடவடிக்கைகளால் மெய் மறக்கும் சில தயாரிப்பாளர்கள் இதற்கு மேல் போட்டுக்கொடுத்து ஜோதிரை குளிர வைப்பதும் உண்டாாம்.

தமிழ் சினிமாவிலேயே ஒரு ஹீரோயின் இம்புட்டு குறைவாக சம்பளம் வாங்குவதுஜோதிர் மட்டுமே என்கிறார்கள். தமிழிலேயே இவ்வளவு குறைவாக வாங்குகிறாரேமலையாளப் படத்தில் சில ஆயிரம்தான் பார்ப்பார் போல.

சம்பளத்தைக் குறைத்து வாங்கினாலும், சமாச்சாரங்களில் வெளுத்துக் கட்டி தான்நடிக்கும் யூனிட்டை கலக்கி எடுத்து விடுகிறாராம் ஜோதிர்.

அப்புறம் பொறாமை வராதா இளசுகளுக்கு?

Read more about: jyothirmayis strong point
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil