»   »  இந்திக்குப் போகும் ஜோதிர்மயி!

இந்திக்குப் போகும் ஜோதிர்மயி!

Subscribe to Oneindia Tamil

மலையாளம் கைவிட்டாலும் கூட தமிழில் ஜெகஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஜோதிர்மயி, அடுத்து இந்தியிலும் திறமை காட்ட தயாராகிவருகிறார்.

ஜோதிர்மயி முதலில் ஹீரோயினாக நடித்த தலைமகன் சூப்பர் ஹிட் படமானது. ஆனால் அந்த சமயம் பார்த்து ஜோதிர்மயி கல்யாணமானவர்,விவகாரத்து பெற்றவர், குழந்தை கூட உண்டு என்று சகட்டு மேனிக்கு செய்திகள் வந்தன.

இதனால் ஜோதிரை புக் பண்ண இயக்குநர்கள், ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடையே தயக்கம் ஏற்பட்டது. ஆனால் அதெல்லாம் இல்லை, நான்சிங்கிள்தான் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாக பி.ஆர்.ஓக்கள் மூலம் பிரசாரம் செய்தார் ஜோதிர்.

இதன் விளைவாக சில பட வாய்ப்புகள் வந்தன. பெரியார் படத்தில் சத்யராஜுடன், நாகம்மை வேடத்திலும், சபரியில் விஜயகாந்த்துடனும் ஜோடிபோட்டு கலக்கி வருகிறார் ஜோதிர்.

இதுதவிர நான் அவனில்லை படத்தில் ஐந்து நாயகியகர்களில் ஒருவராக அசத்துகிறார். இன்னும் 2 படங்களுக்குப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். விரைவில் கையெழுத்துப் போடவுள்ளாராம்.

இந்த நிலையில் தெலுங்கிலும் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்த்தார் ஜோதிர். ஆனால் வேலைக்கு ஆகவில்லை. அந்த சமயத்தில்தான்இந்தியில் அவருக்கு ஒரு படம் வந்தது.

சஞ்சய் சூரி, குல்பனாக் ஆகியோருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளார் ஜோதிர். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இன்னொருஇந்திப் படமும் வந்துள்ளதாம். ஆனால் டீல் முடிவாகவில்லையாம்.

இப்படி மலையாளத்தைத் தவிர மற்ற மொழிகளில் பிசியாக இருந்தாலும் கூட சொந்த ஊரான கேரளாவில்தான் தங்கியிருந்து வந்து நடித்துக்கொடுக்கிறார் ஜோதிர் மயி. சென்னையில் தங்குவதெல்லாம் கிடையாதாம்.

எனக்கு கேரளத்து அமைதிதான் பிடித்திருக்கிறது. சென்னையில் ஒரே சத்தம், அலர்ஜியாகி விட்டது என்று அலுத்துக் கொள்கிறார் ஜோதிர்மயி.

அது சரி, அமைதிக்கு கேரளா, அள்ளுவதற்கு தமிழ்நாடா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil