Iam Lost.. நயன்தாரா இப்படி போஸ்ட் போட இதுவும் ஒரு காரணமா?.. பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஜவானில் நடித்ததற்காக அவருக்கு சமீபத்தில்தான் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரும், விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக கடந்த சில நாட்களாகவே வதந்தி பரவியது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு ராஜா ராணி, நானும் ரௌடிதான், அறம் என தான் நடிப்பதற்கு ஸ்பேஸ் உள்ள படங்கள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான நயன்தாராவாக கலக்க தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கினார்கள்.
காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.
திருமணம்: இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
வதந்தி: நயன்தாரவும், விக்னேஷ் சிவனும் தங்களது திருமணம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பிரியவிருப்பதாக ஒரு தகவல் பரவியது. மேலும் நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று Iam Lost என்று பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள்; இரண்டு பேரும் பிரிவது உறுதியாகிவிட்டதாக அடித்து கூறினார்கள். ஆனால் அந்த சீன்லாம் இங்க இல்லை என்ற வகையில் இரண்டு பேரும் துபாய்க்கு ஒன்றாக சென்ற புகைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
அந்தணன் பேட்டி: இருந்தாலும் Iam Lost என்று நயன் ஏன் போஸ்ட் போட்டார் என்று பலருக்கும் புரியாமல் இருக்கிறது. ஒருதரப்பினர் அது ஸ்லைஸ் ஜூஸுக்காக போடப்பட்டது என்று கூறினார்கள். இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "Iam Lost என்று நயன்தாரா அந்தப் பதிவில் குறிப்பிட்டது விக்னேஷ் சிவனை அல்ல. இருவரும் இப்போது துபாயில் இருக்கிறார்கள். அங்கு நயனுக்கு விருது ஒன்று தரப்படவிருந்தது. சில காரணங்களால் அவர் அதை தவறவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
பிரியமாட்டார்: அதற்காகத்தான் அவர் அந்தப் போஸ்ட்டை போட்டிருக்கலாம். நயனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் விக்னேஷ் சிவன். சமீபகாலங்களில் அவர்கள் வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இரண்டு பேரின் பெயரிலும்தான் வாங்கப்பட்டிருக்கிறது. எனவே நயன் விக்னேஷ் சிவனிடமிருந்து கண்டிப்பாக விவாகரத்து பெறமாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











