செம கோபத்தில் இருந்தார்.. சரத்குமாரை பழிவாங்க துடித்தாரா வரலட்சுமி?.. இப்படி சொல்றாரே இவரு

சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமி குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி கிளப்புவதாக இருக்கிறது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்துவருகிறார். பெரும் கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே நல்ல பழக்கம் இருக்கிறது. அவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை நிக்கோலாய் திறம்பட கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalaxmi Sarathkumar Cheyyaru Balu

திருமணமாகி விவாகரத்து: நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர். அதனையடுத்து சில மாதங்களுக்கு நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணம்: தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி இருவரது திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டாம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.அதில் இரு வீட்டாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த ரிசப்ஷனுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.

ஹனிமூன்: திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கும் சென்றிருக்கின்றனர். இதற்கிடையே இவர்களது திருமண செலவு மட்டும் 850 கோடி ரூபாய் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்த சரத்குமார், "எனது மகள் திருமணத்துக்கு 800 கோடி ரூபாய்வரை செலவு ஆகியிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அந்த செய்தி முற்றிலும் தவறானது" என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் வரலட்சுமி குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

செய்யாறு பாலு பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தன்னுடைய அம்மா சாயா தேவியை தனியாக சரத்குமார் தவிக்கவிட்டுவிட்டார் என்று வரலட்சுமிக்கு கோபம் இருந்ததுண்டு. அவருக்கு பூஜா என்ற தங்கையும் இருக்கிறார். அதுமட்டுமின்றி நாமும் சினிமாவில் இறங்கி சரத்குமாரை பழிவாங்க வேண்டும் என்றுதான் நினைத்தார். அதனால்தான் அவரும் சினிமாவில் நடிக்கவே ஆரம்பித்தார்.

சரத்குமார் சம்மதிக்கவில்லை: அந்த சமயத்தில்தான் பாய்ஸ் படத்துக்கு ஷங்கர் புதுமுகங்களை தேர்வு செய்துகொண்டிருந்தார். நகுல், தமன், பரத், சித்தார்த் என பலரும் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த சமயத்தில் சரத்குமாருக்கு மகள் இருக்கிறார் என்று ஷங்கருக்கு தெரிந்தது. அவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இந்த விஷயம் சரத்குமாருக்கு காதுகளுக்கு சென்றதும் மகள் நடிக்க அவர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் வரலட்சுமிக்கு சரத்குமார் மீது மீண்டும் கோபம் வந்தது. அதனால்தான் போடா போடி படத்தில் வரலட்சுமியாகவே வாய்ப்பை பெற்றுக்கொண்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X