30 நிமிடங்கள்தான் இருப்பேன் ஓகேயா?.. ஓவர் கெத்து காட்டினாரா ப்ரியா பவானி சங்கர்?.. ரசிகர்கள் ஷாக்
சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் ரத்னம் படம் வெளியானது. அதேபோல் தெலுங்கில் பீமா படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ஜீப்ரா, டிமாண்ட்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் ப்ரியா பவானி சங்கர் குறித்து சினிமா பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்திருக்கும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி சங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே தனது நடிப்பில் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா.

முன்னணி நடிகை: முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி சங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.
பல படங்கள் ஓகே; ஒரு ஹிட்?: ப்ரியா பவானி ஷங்கர் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2, டிமாண்ட்டி காலனி 2 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. பல படங்களில் அவர் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஹிட்கூட மேயாத மான் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் ப்ரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகை என்ற பெயரையும் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
சொந்த தொழில்: இதற்கிடையே சினிமாவில் மட்டுமின்றி தொழிலிலும் கவனம் செலுத்துகிறார் அவர். அந்தவகையில், லியாம்ஸ் டைனர் (Liam's Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை வாழ்த்துகள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலை அவர் தனது காதலருக்காக தொடங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் ப்ரியா பவானி சங்கர் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "சிங்கப்பூரில் கட்டட தொழிலாளர்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் அந்த கச்சேரி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு நடிகையை கூப்பிட திட்டமிட்டு ப்ரியா பவானி சங்கரை அழைத்திருக்கிறார்கள். அதற்கு ப்ரியா சில கண்டிஷன்களை வைத்திருக்கிறார்.
30 நிமிடம்தான் இருப்பேன்: அதாவது, நான் இப்போது ஆஸ்திரியாவில் இருக்கிறேன். எனவே சிங்கப்பூருக்கு பிஸ்னெஸ் கிளாஸ் டிக்கெட் போட வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். பிறகு, நான் 30 நிமிடங்கள்தான் இருப்பேன். என்ன பேச வேண்டும் என்று எனக்கு தெரியும் என சொல்லிவிட்டு நிகழ்ச்சியில் கலந்திருக்கிறார். சொன்ன்படியே 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு நிமிடம்கூட அங்கு நிற்கவில்லை. அந்த நிகழ்ச்சியை இதனால் புலம்பி தள்ளிவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











