ஓவர் கிளாமர்.. கேரவன் இல்லை.. கார் மறைவில் நின்று உடை மாற்றினார் நயன்தாரா.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஜவானில் நடித்ததற்காக அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Anthanan Ghajini

இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு ராஜா ராணி, நானும் ரௌடிதான், அறம் என தான் நடிப்பதற்கு ஸ்பேஸ் உள்ள படங்கள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான நயன்தாராவாக கலக்க தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கினார்கள்.

காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.

திருமணம்: இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டெஸ்ட் என்ற படமும், மண்ணாங்கட்டி படமும் வெளியாகவிருக்கின்றன. மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் கஜினி படத்தில் நயன்தாரா பணியாற்றியபோது ஒரு விஷயம் நடந்ததாக பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “கஜினி படத்தின் ஒரு காட்சி ஷூட்டிங் சென்னை ஒய்எம்சிஏ க்ரவுண்டில் நடந்தது. அப்போது வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற காட்சியை முருகதாஸ் ஷூட் செய்தார். அந்த சீனில் நயன் ஓடிவரும்போது முருகதாஸ் கட் கட் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் அப்போது நயன் அணிந்திருந்த சட்டையால் அந்தக் காட்சியில் கொஞ்சம் ஆபாசம் அதிகம் இருந்திருக்கிறது.

வேறு சட்டை: அதனை பார்த்த முருகதாஸ் இல்லை இது ரொம்ப ஆபாசமா இருக்கு என்னால் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு வேறு சட்டை போட சொன்னார். ஆனால் நயனிடம் வேறு சட்டை எதுவும் இல்லை. உடனே அவர் முருகதாஸிடம், 'என்னங்க கடைசி நேரத்தில் இப்படி சொல்கிறீர்கள். நான் மாற்று ஆடையும் எடுத்துக்கொண்டு வரவில்லை; கேரவனும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி சரி ஏதாவது ஒரு வேறு சட்டை வாங்கி வாருங்கள் என்று சொல்ல; உடனே முருகதாஸின் உதவி இயக்குநர் சென்று ஒரு ப்ளாட்பார்ம் கடையில் சட்டையை வாங்கி வந்தார். அதை வாங்கிக்கொண்ட நயன், தனக்கு கேரவன் இல்லாததால் அங்கு நின்று கொண்டிருந்த காரின் பின்னால் சென்று மறைவில் நின்று வேறு சட்டையை போட்டுக்கொண்டு வந்தார்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X