பத்தாது சார்.. இயக்குநர் சொல்லியும் கேட்காமல் கவர்ச்சி காட்டினாரா நயன்தாரா?.. பிரபலம் சொன்ன விஷயம்
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் நயன்தாரா குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.
தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நயன்தாரா குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “கஜினி படத்தின் ஒரு பாடலுக்கு நயன்தாரா ஸ்கர்ட் அணிந்து வர வேண்டும். அதன்படி வந்தார். ஆனால் தொடை தெரியும்படி ஸ்கர்ட் அணிந்து வந்தார். அதை பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சியாகி, 'என்னம்மா இவ்வளவு கிளாமரா இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கீழே ஸ்கர்ட் இறங்கியிருந்தால் நன்றாக இருக்கும்’ என்று சொன்னார்.
யாராவது பார்ப்பாங்களா சார்: அதற்கு நயனோ, 'சார் நீங்கள் சொல்லும்படி இருந்தால் யாராவது பார்ப்பார்களா?.. இன்னும் ஸ்கர்ட்டை குறைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்களோ, இன்னும் கீழே இறங்கி இருக்க வேண்டும் என்று சொல்றீங்களே' என்று நயன் சொன்னதும் முருகதாஸுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. அதற்கு பிறகு முருகதாஸிடம் எதுவும் கேட்காமல், காஸ்ட்யூமரை அழைத்து கத்திரியை எடுத்து வர சொன்னார்.
மேலும் குறைத்த நயன்: கத்திரி வந்த கையோடு தான் அணிந்திருந்த ஸ்கர்ட்டை இன்னும் கொஞ்சம் கட் பண்ணினார். அதற்கு பிறகு மேலும் கவர்ச்சி இருந்தது. நயன் அப்படி செய்தது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல், தான் ஒரு பெரிய நடிகை என்ற பந்தா எதுவும் இல்லாமல் அவரே கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு நின்றுகொண்டே ஸ்கர்ட்டை கட் செய்த எளிமை அவருக்கு இருந்ததை பார்த்து பலர் ஆச்சரியமும் பட்டனர்" என்றார்.


Click it and Unblock the Notifications











