முத்தம் கொடுக்கும் ஃபோட்டோ.. இத்தனை வருடங்கள்.. யாரை வெறுப்பேற்றுகிறார் நயன்தாரா?.. விளாசிய பிரபலம்

சென்னை: விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றெடுத்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் அவர் சமீபமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். இதனால் அவர்தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார் நயன்தாரா. அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அந்தக் காதல் முறிவைத் தொடர்ந்து வில்லு படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப் ஆனது. பிரபுதேவாவை நயன் காதலித்தபோது அவர் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார். முக்கியமாக அடுத்தவரின் கணவரை திருடுபவர்தான் நயன்தாரா; அவரை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்று பிரபுதேவா முன்னாள் மனைவி ரம்லத் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

nayanthara vignesh shivan anthanan

இரண்டாவது இன்னிங்ஸ் தனது இரண்டாவது காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நயன்; தனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அவரை காதலித்து லிவிங் டூ கெதரில் இருந்த லேடி சூப்பர் ஸ்டார்; கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பிஸியான நடிகை: திருமணம் ஆகி குழந்தை பெற்றால் பெரும்பாலான நடிகைகள் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் நயனோ பிஸியாக நடித்துவருகிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் நயன்: ஒருபக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் அவர். முதலில் தனுஷுடன் மோதல், பிறகு வலைப்பேச்சு குழுவினரை தரக்குறைவாக பேசியது, அடுத்தது ரஜினி சூப்பர் ஸ்டார் என்றே சந்திரமுகி படத்தில் நடித்தபோது தனக்கு தெரியாது என்று கூறியது என சிக்கிக்கொண்டே இருக்கிறார். ரசிகர்களும் அவரையும், விக்னேஷ் சிவனையும் கடுமையாக விமர்சனம் செய்து ட்ரோலும் செய்துவருகின்றனர். ஆனால் நயன் அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில்கூட தனது குடும்பத்தினருடன் பாரீஸ் சென்று புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் அவர்.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நயன்தாராவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் என்னமோ புது மண தம்பதிகள் போல் முத்தம் கொடுக்கும் ஃபோட்டோ, கட்டிப்பிடிக்கும் ஃபோட்டோ உள்ளிட்டவற்றையெல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். எதற்காக அவர் அப்படி செய்கிறார் யாரை வெறுப்பேற்ற அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. குடும்பமாக செல்லுங்கள் என்ஜாய் செய்யுங்கள். ஆனால் இது மாதிரியான புகைப்படங்களை போடுவதெல்லாம் தேவையற்ற வேலை. இதில் செலுத்தும் கவனத்தை அவரும் விக்னேஷ் சிவனும் சினிமாவில் செலுத்தியிருந்தால் இன்னமும் அவர்கள் வளர்வார்கள்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X