ரோஜாவை பற்றி குடும்பத்திடம் கேட்டால்தான் தெரியும்.. வனிதாவை வெளுத்த பிரபலம்.. இந்த அடி அடிக்கிறாரே

சென்னை: 90களில் தமிழ் சினிமாவின் ஃபேமஸான நடிகைகளில் ஒருவர் ரோஜா. ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர்; இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அரசியலுக்கும் சென்ற அவர்; இப்போது மீண்டும் கேமராவுக்கு முன் வந்திருக்கிறார். வெள்ளித்திரையில் லெனின் பாண்டியன் படத்தில் நடித்திருக்கும் அவர்; ;சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். அவர் நடுவரானதற்கு வனிதா விஜயகுமார் விமர்சனத்தை எழுப்பியிருந்தார்.

தமிழில் செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரோஜா. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, அசுரன், ராசைய்யா என பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. இதனால் குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் அவருக்கு மார்க்கெட் வளர்ந்தது போன்று தெலுங்கிலும் அவருக்கான மார்க்கெட் உயர்ந்தது. இதனால் அங்கேயும் கொடி கட்டி பறந்தார்.

Journalist Anthanan Slams Vanitha Vijayakumar for Criticising Roja s Cook With Comali Judge Role
Photo Credit:

செல்வமணியுடன் திருமணம்: இதற்கிடையே செம்பருத்தி திரைப்படத்தில் நடித்தபோதே ஆர்.கே. செல்வமணியுடன் ரோஜாவுக்கு காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக காதலித்த அவர்கள்; கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்த கையோடு நடிப்பிலும் பிஸியாக இருந்த ரோஜா; ஆந்திர அரசியலிலும் கோலோச்சி அங்கேயும் தனது தடத்தை வீரியமாக பதித்தார். ரோஜா - செல்வமணி தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

Also Read
தாலி கட்டும் நேரத்தில் பயம்.. நிக்கி கல்ராணியிடம் மேடையில் ஆதி சொன்னது தெரியுமா?.. சூப்பர் ஜோடி பாஸ்
தாலி கட்டும் நேரத்தில் பயம்.. நிக்கி கல்ராணியிடம் மேடையில் ஆதி சொன்னது தெரியுமா?.. சூப்பர் ஜோடி பாஸ்

மீண்டும் வந்த ரோஜா: அரசியலில் கவனம் செலுத்தியதால் ஸ்க்ரீனில் அவரது கவனம் இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கும் அவர்; லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் நடுவராக வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து கேமராவுக்கு முன்பு ரோஜாவை அடிக்கடி பார்ப்பதால் அவரது ரசிகர்கள் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ரோஜாவை வனிதா விஜயகுமார் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

அந்தணன் பதிலடி: அவர் கொடுத்திருந்த பேட்டியில், 'குக் வித் கோமாளி சமையல் தொடர்பான நிகழ்ச்சி. அதில் நடுவராவதற்கு ரோஜாவுக்கு தகுதி இல்லை. நான் சிறந்த சமையல் கலைஞர். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறது' என கூறியிருந்தார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், "வனிதா பேசுவதெல்லாம் வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே. அது தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. ரோஜாவுக்கு சமைக்க தெரியாது என்று வனிதாவுக்கு எப்படி தெரியும்?

குடும்பத்திடம் கேளுங்கள்: ரோஜா சமைப்பாரா மாட்டார் என்பது ரோஜாவின் குடும்பத்திடம் கேட்டால்தான் தெரியும். குக் வித் கோமாளி என்பது பெரிய டீம். பெரிய டீம்தான் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. அவர்கள் ஐடியா இல்லாமல் ரோஜாவை அழைத்து வருவார்கள். அரசியலில் சாதனை செய்தவர் ரோஜா. அதில் ஏதோ சின்ன பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். அதை பயன்படுத்திக்கொள்ளத்தான் பார்ப்பார்கள். எதுவும் தெரியாமலா நிகழ்ச்சி குழு அவரை நடுவராக அழைத்து வருவார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X