ஏன் தனியாக இருக்க வேண்டும்.. ஜோதிகா - சூர்யா மும்பையில் செட்டில்.. காரணம் யார்?.. ஓபனாக பேசிய அந்தணன்
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யா - ஜோதிகா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.
மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகியிருக்கிறது. படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து வதந்தி: சூழல் இப்படி இருக்க ஜோதிகாவால் சூர்யா வீட்டுக்குள் பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே தொடர்ந்து பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமின்றி சூர்யா மும்பைக்கு சென்று செட்டில் ஆகவே ஜோதிகாதான் காரணம் என்றும்; சென்னை வந்தால்கூட சிவகுமாரை ஜோதிகா சந்திப்பதில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஜோதிகா கொடுத்த ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கணவர்: ஆனால் சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். சூர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஸ்ரீகாந்த் படம் வெளியானது. இந்தப் படம் தவிர்த்து வேறு சில படங்களிலும் நடிக்கிறார் ஜோதிகா. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா பக்கா சப்போர்ட்டாக இருக்கிறார்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் சூர்யா - ஜோதிகா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், "மாமனார் - மாமியாருக்கு வயதாகிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் ஒருகட்டத்தில் ஓவர் அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார்கள். அது இந்தத் தலைமுறைக்கு பிடிக்காது. மேலும் ஜோதிகாவின் தாய் மும்பையில் வயதாகி தனியாக இருக்கிறார். எனவே அவரை பார்த்துக்கொள்ளவும், ஜோதிகா மும்பைக்கு சென்றிருக்கிறார். மனைவியும், குழந்தைகளும் அங்கு சென்ற பிறகு இங்கு தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் சூர்யாவும் மும்பை சென்றிருக்கிறார். ஆனால் ஜோதிகாவை சூர்யா பிரியப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன. அதெல்லாம் சுத்த பொய்" என்றார்.


Click it and Unblock the Notifications











