Trisha - திரிஷா மீது அவதூறு.. பிரபலம் சொன்ன அதிரடி விஷயம்

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 40 வயதாகும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

Journalist Anthanan Talks about Trisha Controversy

தொடர்ந்து டாப் ஹீரோயின்: அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. முக்கியமாக விஜய்யுடன் அவர் நடித்த கில்லி, விக்ரமுடன் அவர் நடித்த சாம் உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் அவர். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.

சின்ன சறுக்கல்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 96 திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் ஹிட்டாக திரிஷா ஜானுவாக கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் 2 பாகங்கள், லியோ, ராங்கி என வரிசையாக படங்களில் நடித்து மீண்டும் பிஸியாகிவிட்டார்.

அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்றும்; அதில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நயனும் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்திருப்பதால் திரிஷா காட்டில் அடைமழை என்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

புதிய பிரச்னை: இதற்கிடையே திரிஷாவை சுற்றி அண்மைக்காலமாக பிரச்னை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய சூழலில்; தற்போது சேலம் மாவட்டத்தின் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அதற்கு திரைத்துறையிலிருந்து கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. மேலும் இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று திரிஷாவும் தெரிவித்திருக்கிறார்.

அந்தணன் வீடியோ: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசுகையில், "திரிஷாவை பற்றி அதிமுக மாஜி பிரமுகர் பேசியது கடும் கண்டனத்துக்குரியது. செய்யாத தவறுக்காக இப்போது பிரச்னையை திரிஷா சந்தித்துவருகிறார். இவர் சொல்வதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா. திரிஷா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை. பல மீடியாக்கள் குழுமியிருந்த ஒரு இடத்தில் தவறு நடந்ததாக அதிமுக பிரமுகர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் திரிஷா மீது எந்தத் தவறும் இல்லை" என்றார்." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X