ஒரே தகராறு.. அந்த நடிகை ஒரு திருநங்கையாம்.. இஷ்டத்துக்கு பேசிய பிரபலம்.. வெளுக்கும் ரசிகர்கள்

சென்னை: மலையாளம் மற்றும் தமிழில் படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இரண்டு மொழிகளிலும் எதிர்பார்த்த வெற்றியை அவரால் பெறமுடியவில்லை. இப்போது நகை கடை திறப்பு விழா உள்ளிட்டவைகளுக்கு செல்லும் அவர்; கொஞ்சம் கிளாமரான லுக்கில்தான் வலம் வருவார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாளத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான பாய் ஃப்ரெண்ட் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹனிரோஸ். அதனைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையாமல் அவ்வப்போது மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி கிடைத்த வாய்ப்புகளையும் அவர் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும்படி பயன்படுத்திக்கொள்ளவில்லை.

தமிழில் ஹனியின் அறிமுகம்: பாலமுருகன் இயக்கிய முதல்கனவே என்ற படத்தின் மூலம் 2007ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். அதனையடுத்து ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம்புலி படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. அதனையடுத்து மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் எதுவும் பெற்றுத் தரவில்லை. மலையாளம் போலவே தமிழும் கைவிட்டதால் கொஞ்சம் அப்செட்டானார் அவர்.

Journalist Bayilvan Ranganathan Says actress Honey rose is a transgender
Photo Credit:

என்னது அம்மாவா?: ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த ஹனிரோஸ் ஒருகட்டத்தில், வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். பாலகிருஷ்ணாவுக்கு மகள் வயதிருக்கும் ஹனிரோல் பாலய்யாவுக்கு தாயாக நடித்தார். இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எந்த ஊரு நியாயம் என கூறி கடுமையாக ட்ரோல் செய்தனர். மேலும் மீம் மெட்டீரியலாகவும் மாறினார். இதற்கிடையே ஹனிரோஸ் உருவ கேலியையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது: சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஹனிரோஸ் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கம். அதனைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் இடுப்பு பகுதியை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என கூற ஆரம்பித்தனர். ஆனால் அதனை ஹனிரோஸ் திட்டவட்டமாக மறுத்து பேட்டியும் கொடுத்தார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் பெரிய ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

பயில்வானின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஹனிரோஸ் நடிகையா நடிகரா?.. உங்கள் பார்வையில் நடிகை என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஹனிரோஸின் அழகை ரொம்பவே பில்டப் செய்துவிட்டார்கள். அது நெகட்டிவ் பப்ளிசிட்டியாக இருந்தாலும் ஃபேமஸ் ஆகிவிட்டது. எனவேதான் அவரை விழாவுக்கு கூப்பிடுகிறார்கள். ஹனிரோஸுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தவில்லை.

அவர் ஒரு திருநங்கை: ஷூட்டிங் வர முடியாது என்று தகராறு எல்லாம் செய்தார். அதனால் கோலிவுட் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை படத்தில் கமிட் செய்ய தயக்கம் காட்டினார்கள். அவர் ஒரு வித்தியாசமான திருநங்கை. திருநங்கைகள் என்றால் அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் ஹனியை வைத்து வருமானம் வருவதால் அவரது குடும்பத்தினர் சேர்த்துக்கொண்டார்கள். அவர் திருநங்கைதான் என்பது எனக்கு நன்றாக தெரியு" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களோ; இவர் என்ன இஷ்டத்துக்கு பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார். இவரை யாராவது சட்டப்பூர்வமாக ஹேண்டில் செய்து கன்ட்ரோல் செய்யுங்க ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X