புஷ்பா புருஷன் மாதிரிதான் நயன்தாரா புருஷன்.. விக்னேஷ் சிவனை இப்படி சொல்லிட்டாரே பிரபலம்
சென்னை: போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதுவரை நானும் ரௌடிதான் படத்தை மட்டும்தான் ஹிட்டாக கொடுத்திருக்கிறார். இப்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஏப்ரல் பத்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படம் தனது கணவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என நடிகை நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் துப்பாக்கி படத்தோடு ரிலீஸ் செய்து காலியானது படம். சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்கூட, துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சியில் விஜய் மொத்தம் 12 பேரை சுடுவார். அவர் சுட்ட 13ஆவது ஆள் நான். அந்தப் படம் மெகா ஹிட். அதோடு போடா போடி வந்தபோதே அதனுடைய கதை முடிந்துவிட்டது என்று புலம்பினார். அதுவும் ஒருவகையில் உண்மைதான். அப்படத்தின் தோல்வி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள்வரை விக்கியை எழுந்திருக்கவே விடவில்லை.

சினிமாவில் தொடர்ச்சியாக: இயக்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் வராததால் சினிமாக்களில் பாடல்கள் எழுதுவது, நடிப்பது என கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். அப்படி செய்தபோது தனுஷின் அறிமுகம் கிடைக்க; நானும் ரௌடிதான் பட வாய்ப்பு அமைந்தது. அதில் பணியாற்றியபோது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தனைக்கும் காரணமான தனுஷுடன் பின்னர் இந்த ஜோடிக்கு பெரிய பிரச்னையே ஏற்பட்டது.
ஃபீல் செய்த விக்னேஷ் சிவன்: தனுஷுடனான உறவு முறிந்ததற்கு ரொம்பவே ஃபீலும் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அவர் சமீபத்தி கோபிநாத்துக்கு கொடுத்த பேட்டியில், "தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நடிகராக தாண்டி பெரிய இடத்தில் வைத்திருக்கிறேன். அவர் பிறந்தநாள் ஜூலை 28. எனது அப்பா இறந்த நாளும் அதுதான். அதனால் அவர் மீது ரொம்ப பெரிய அன்பு வைத்திருக்கிறேன். சில விஷயங்கள் எதனால் நடந்தது என்று தெரியவில்லை. அவருடைய நட்பை இழந்தது எனது மிகப்பெரிய இழப்பு. அதனை அவமானமாகவும் பார்க்கிறேன்.
அவர்தான் காரணம்: ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது. இப்போது நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் மட்டும்தான். அவருடன் இரண்டு வருடங்கள் இருந்தேன். அவர் சாப்பிட்டால் நானும் சாப்பிடுவேன். பிரச்னையே இல்லாமல் இருவர் பிரிந்தால் என்ன செய்ய முடியும். இதை என்ன செய்து சரி செய்வதென தெரியவில்லை. தனுஷ் மீது எனக்கு எப்போதும் அன்பு, பாசம், நன்றியுணர்வு இருக்கிறது" என்றிருந்தார். அவரது இந்தப் பேட்டி ட்ரெண்டானது.
பிஸ்மி விளாசல்: இந்நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "போடா போடி படத்தின் தோல்விக்கு பிறகு சோனா வீட்டில்தான் விக்னேஷ் சிவன் கிடைத்த வேலைகளை செய்துகொண்டிருந்தார். அவர் ஒன்றும் வெற்றி பட இயக்குநர் எல்லாம் கிடையாது. நானும் ரௌடிதான் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் தோல்விதான். அவரை பற்றி நூறு பேரிடம் கேட்டால் அதில் பத்து பேர்தான்; விக்னேஷ் சிவன் ஒரு இயக்குநர் என்று சொல்வார்கள். பாக்கி 90 பேர் அவர் நயன்தாரா புருஷன் என்றுதான் சொல்வார்கள். அதுதான் அவரது அடையாளம். புஷ்பா புருஷன் என்பது எப்படி ஒரு அடையாளமோ அது மாதிரிதான், விக்னேஷ் சிவன் நயன்தாரா புருஷன்" என்றார்.


Click it and Unblock the Notifications















