Keerthy suresh: 15 வருட காதலை மறைத்தது ஏன்? இன்று கீர்த்தி சுரேஷ் திருமணம்.. பிரபலம் சொல்வது என்ன?

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்கிறார். கோவாவில் அவர்களின் திருமணம் இன்று நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர். காலையில் ஹிந்து முறைப்படி, மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சே குவேரா, கீர்த்தி சுரேஷ் இப்போது திருமணம் செய்து கொள்வது உண்மையிலேயே நல்ல விஷயம், அதை நான் வரவேற்கிறேன். நடிகர்கள் அனைவரும் ரெண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும்போது நடிகைகள் மட்டும் பட வாய்ப்பு குறைந்து விடும் என்பதற்காக, திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் பல நடிகைகளின் வாழ்க்கையே வீணாகி இருக்கிறது. அந்த வகையில் சிம்ரன் அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும், அவர்கள் படத்தில் பிஸியாக இருந்த போதும், திருமணத்தை செய்து கொண்டு கணவன் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார்.

keerthy suresh antony thattil che guevara

கீர்த்தி சுரேஷ் திருமணம்: அதேபோல கீர்த்தி சுரேஷும் இப்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாக இருக்கிறார். இதற்கு காரணமாக இருந்த கீர்த்தி சுரேஷ் அவர்களின் பெற்றோரை தான், முதலில் பாராட்ட வேண்டும் ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அம்மா மேகனா ஒரு நடிகை. ஆனால், அவரை விட அவரது மகள், கீர்த்தி சுரேஷ் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறாள். நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் மகளின் சம்பாத்தியம் முக்கியம் என்று பார்க்காமல் திருமணத்தை செய்து வைக்க நினைத்தது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள் அந்த வகையில் அவர்களின் பெற்றோரை நான் பாராட்டுகிறேன்.

நம்ப முடியல: ஆனால் கீர்த்தி சுரேஷ், 15 வருட காதல் என்று சொல்வதை என்னால், ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவரை சுற்றி பலவிதமான கிசுகிசுக்கள் இணையத்தில் பரவின. அப்போது, அவர் காதலிப்பதாக கூறியிருந்தால், அவர் குறித்து எந்த ஒரு கிசுகிசுவும் பரவி இருக்காது. ஆனால் அப்போதெல்லாம் தன்னுடைய காதலை பற்றி சொல்லாமல், மறைத்துவைத்து விட்டு இப்போது திருமணமாகும் நேரத்தில் காதலிப்பதாக சொல்வது ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் திருமணம் செய்து கொண்டு அவர் நன்றாக இருந்தால் மகிழ்ச்சி தான்.

ஆயிரம் கோடி சொத்தா: ஆனால் தற்போது இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது கீர்த்தி சுரேஷூக்கு ஆயிரம் கோடி சொத்து என்று சொல்கிறார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு 200 முதல் 300 கோடி சொத்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆயிரம் கோடி என்கிறார்கள், அது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. இவருக்கே ஆயிரம் கோடி சொத்து என்றால், இவர் திருமணம் செய்ய இருக்கும்,தொழிலதிபருக்கு எத்தனை கோடி சொத்து இருக்கும். சொத்து இருப்பதால் தான் கீர்த்தி சுரேஷ் இந்த திருமண முடிவை எடுத்து இருக்கிறார் என்று சினிமா பத்திரிக்கையாளர் சே குவேரா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X