நடிகை சௌந்தர்யா மரணம்.. கணவர் மிரட்டப்பட்டாரா?.. ஏன் முந்திக்கொண்டு வரணும்?.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: தெலுங்கு, தமிழில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக தனது சகோதரர் அமர்நாத்துடன் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரது மரணம் பூதாகரமாகியிருக்கிறது. அதாவது சௌந்தர்யாவை மோகன் பாபு கொலை செய்துவிட்டார் என்று சிட்டிமல்லு என்பவர் புகார் அளிக்க; அதனை சௌந்தர்யாவின் கணவர் ரகு திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த சௌந்தர்யாவுக்கு தமிழில் பொன்னுமணி திரைப்படம் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை அடுத்து வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார் அவர். அந்தவகையில் ரஜினி, கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். அதேபோல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையான அம்மன் திரைப்படத்தில் நடித்தும் ஃபேமஸானார் சௌந்தர்யா.

திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா: தமிழில் ஒரு பக்கம் பிஸியானாலும் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விடவில்லை அவர். அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய கரியர் பீக்கில் இருக்கும்போதே ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். பொதுவாக ஒரு நடிகை மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்துகொள்ள தயங்கும் சூழலில் சௌந்தர்யா திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்: திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்பத்தோடு செட்டில் ஆன அவர்; அரசியலில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் 2004ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக தனது சகோதரர் அமர்நாத்துடன் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் உடல் கருகி சௌந்தர்யாவும், அமரும் உயிரிழந்தார்கள். அவரது உயிரிழப்பு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியது.
சிட்டிமல்லுவின் புகார்: இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் சில நாட்களுக்கு முன்பு சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல; அது கொலை என்று காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், "சௌந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத்தின் மரணத்துக்கு நடிகர் மோகன் பாபுதான் காரணம். ஹைதராபாத் ஷம்ஷாப்த்தின் ஜல்லே பள்ளியில் சௌந்தர்யாவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் இருந்தது. அதனை விலைக்கு வாங்குவதற்காக மோகன் பாபு கேட்டார்.

மறுத்துவிட்ட சௌந்தர்யா?:ஆனால் சௌந்தர்யாவின் சகோதரரான அமர்நாத் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் பாபு சௌந்தர்யாவையும், அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்தரித்துவிட்டார். அவர்கள் இரண்டு பேரும் இறந்த பிறகு அந்த நிலத்தை மோகன் பாபு அபகரித்து விருந்தினர் மாளிகையை கட்டிவிட்டார். எனவே அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாக கையகப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சேகுவேரா பேட்டி: ஆனால் அதனை சௌந்தர்யாவின் கணவர் ரகு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டுகிறார். காவல் துறை இருக்கிறது.அதனை விசாரிக்கட்டுமே. குற்றஞ்சாட்டப்பட்ட மோகன் பாபுவே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் எதுவும் கூறாமல் இருக்கிறார். ஆனால் சௌந்தர்யாவின் கணவர் ரகுவோ எதற்காக முந்திக்கொண்டு வந்து இதனை மறுக்க வேண்டும். இதனால் சந்தேகம் எழத்தான் செய்கிறது.
ரஜினியின் நெருங்கிய நண்பர்: அதேபோல் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் மோகன் பாபு. ரஜினியுடன் ஒரே மெத்தையில் படுக்கும் அளவுக்கு அவருக்கு நெருக்கம் உண்டு. வேறு யாராலும் ரஜினியை அவ்வளவு நெருங்க முடியாது. முக்கியமாக ரஜினிகாந்த்தின் சொத்துக்களுக்கு மோகன் பாபு பினாமியாக இருப்பாரோ என்றும் பலர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இதற்கிடையே மோகன் பாபுவுக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருக்கும். அவ்வளவு பெரிய பவர் ஃபுல்லான ஆள் அவர்.

மிரட்டப்பட்டாரா?: அதேபோல் 10,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஒருவர் சௌந்தர்யாவின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏன் கேட்க வேண்டும். அதனை சௌந்தர்யா தருவதற்கு ஏன் மறுக்க வேண்டும். இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக சௌந்தர்யா மரணமடைந்த பிறகு அந்த நிலத்தை மோகன் பாபு அபகரித்துவிட்டார் என்று புகார் கூறுகிறார். அப்படியெனில் சௌந்தர்யாவின் கணவர் ரகு கையெழுத்திட்டிருக்க முடியாது. அப்போ ரகு மோகன் பாபு தரப்பால் மிரட்டப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறதுதானே.
பின்னணியில் மகன்: கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். எனவே இந்த விஷயத்தை தீர விசாரிப்பதில் என்ன வந்துவிடப்போகிறது. விசாரித்துவிட்டு இது உண்மையா இல்லை பொய்யா என்ற முடிவுக்கு வரலாமே. அதேசமயம் சிட்டிமல்லுவுக்கு பின்னால் மோகன் பாபுவின் மகன் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே எதையுமே திட்டவட்டமாக நம்மால் கூறிவிட முடியாது. அதேபோல் மோகன் பாபுவை அவ்வளவு சீக்கிரம் யாராலும் தொட்டுவிட முடியாது" என்றார்.
மகனுடன் மோகன் பாபுவுக்கு பிரச்னை: முன்னதாக மோகன் பாபுவுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டாவது மகன் மனோஜுக்கும், மோகன் பாபுவுக்கும் கடந்த வருடம் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதாவது மனோஜ் மீது மோகன் அளித்திருந்த ஒரு புகாரில், "எனது இரண்டாவது மகனான மனோஜ் சில சமூக விரோதிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்து தொந்தரவு செய்தார். எனக்கும் எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லாததால் எனக்கு பயமாக இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. எனவே அவரை பழிவாங்குவதற்காக மனோஜ் இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் ஒருதரப்பினரால் சந்தேகிக்கப்படுகிறது.
ரகு கொடுத்த விளக்கம்: இதற்கிடையே சௌந்தர்யாவின் கணவர் கொடுத்திருந்த விளக்கத்தில், "ஹைதராபாத்தில் நிலம் ஒன்றை தொடர்புப்படுத்தி கடந்த சில நாட்களாக மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா பற்றிய போலியான தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. எனது மறைந்த மனைவி சௌந்தர்யாவின் எந்த நிலத்தையும் மோகன் பாபு ஆக்கிரமிக்கவில்லை என்பதை தெளிவாக நான் உறுதிப்படுத்திக்கொள்கிறேன். இதுதொடர்பாக எந்தவொரு பரிவர்த்தனையும் எங்களுக்கிடையே நடைபெறவில்லை. எங்கள் குடும்பத்துக்கு மோகன் பாபு நல்ல நண்பர். இதுதொடர்பாக வரும் அனைத்து செய்திகளும் போலியானவை. எனது மனைவி மரணத்துக்கும் மோகன் பாபுவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











