ஷகிலா கவர்ச்சி நடிகை மட்டும்தானா?.. அவர் யார் தெரியுமா?.. செம சீக்ரெட் சொன்ன பத்திரிகையாளர்
சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழிலும் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி யூடியூப் சேனலை நடத்திவருகிறார். மேலும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியையும் அளித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மலையாள திரையுலகில் 18+ திரைப்படங்களில் நடித்து வெகு பிரபலமானவர் ஷகீலா. சில்க் ஸ்மிதா பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் வந்த ஷகீலா சில்க் நடித்த படத்தின் மூலம்தான் அறிமுகமும் ஆனார். சில்குக்கு போட்டியாக பலர் ஷகீலாவை முன்னிறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதால் அடுத்ததாக வந்த கவர்ச்சி நடிகைகள் ஷகீலாவுக்கு பின் நிலையிலேயே இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துக்கொண்டே இருந்தன.

போட்டி: மலையாள ஸ்டார்களான மோகன் லால், மம்மூட்டி ஆகிய இரண்டு பேரும் படு பிஸியாக இருந்த நேரத்தில்கூட அவர்களின் படங்களுக்கு போட்டியாக திகழ்ந்தது ஷகீலா நடித்த படம். உதாரணமாக கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதனைப் பார்த்த ஒட்டுமொத்த மலையாள திரையுலகும் ஆச்சரியம்தான் பட்டது. முக்கியமாக மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்டோர் ஷகீலாவின் படங்களுக்கு எதிராக பல சூழ்ச்சி வேலைகளை பார்த்ததாகவும் ஒரு பேச்சு பல காலமாகவே உண்டு.
குக் வித் கோமாளி: ஷகீலா என்றாலே கவர்ச்சி நடிகை என்ற அடையாளம்தான் பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த மனிதியை அனைவருமே தெரிந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர் சக போட்டியாளர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். மேலும் ஷீத்தல் என்ற திருநங்கையையும் அவர் தத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் அவர் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டார். அதுதவிர்த்து பேட்டிகள் கொடுக்கவும், எடுக்கவும் செய்கிறார்.
வைத்து செய்த பயில்வான் ரங்கநாதன்: ஷகீலாவைப் பொறுத்தவரை தனது மனதில் பட்டதை சட்டென பேசும் குணம் கொண்டவர். சினிமா நடிகர், நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதனை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உட்கார வைத்து செய்துவிட்டார் ஷகீலா. அது பெரும் பேசும்பொருளாகி அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா ஷகீலா குறித்து பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "ஷகீலாவை உங்களுக்கு வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும்தானே தெரியும். அவர் யார் தெரியுமா. அவர் ஒரு தமிழச்சி. அவரை பார்த்து மோகன் லால், மம்மூட்டியே பயந்த காலம் எல்லாம் இருந்தது. அண்மையில்கூட பயில்வான் ரங்கநாதனை உரிச்சு தொங்க விட்டார்தானே" என்றார்.


Click it and Unblock the Notifications











