நக்மா மீது ஆசைப்பட்ட ரவுடி?.. இன்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு?.. பத்திரிகையாளர் இப்படி சொல்லிட்டாரே

சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழடைந்த அவருக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். ஜோதிகாவின் அக்காவான அவர் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில விஷயங்களை ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவின் சகோதரி நக்மா. நக்மாவும் நடிகை ஆவார். தமிழில் அவர் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஒருகாலத்தில் நக்மாவும் தமிழில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டே பாலிவுட்டில் அறிமுகமான நக்மா ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துவந்தார். அவரை இயக்குநர் ஷங்கர் தனது காதலன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படம் ஹிட்டாக அடுத்தடுத்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா படத்தில் நடித்து நிறைய ரசிகர்களை சம்பாதித்தார்.

Nagma Jothika Cheyyaru Balu

தமிழில் படங்கள்: பாட்ஷா படத்தில் நடித்த பிறகு ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், பிஸ்தா, ஜானகிராமன் என பல படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் கம்மியாக தீனா படத்தில் ஒரு பாடலுக்கும், சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அந்தப் படம்தான் அவர் தமிழில் நடித்த கடைசி படமாகும்.

அரசியல்வாதி: தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இவர் கடைசியாக 2008ஆம் ஆண்டு போஜ்புரி மொழியில் நடித்ததோடு நடிப்புக்கு மூட்டை கட்டி அரசியலில் அடியெடுத்துவைத்தார். இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

நோ திருமணம்: 48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், "எனக்கு திருமணம் செய்யவேக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது. அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனது வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்யாறு பாலு சீக்ரெட்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ஒரு வீடியோவில் நக்மா குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "நக்மாவின் தாய் முதலில் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நக்மா. சில காலத்திலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள். பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் ஜோதிகா. ஆனாலும் நக்மாவும், ஜோதிகாவும் ஒரே குடும்பம் போல்தான் பழகுவார்கள். நக்மாவின் இரண்டாவது தந்தைதான் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

செம கிரேஸ்; பாலிவுட்டில் அறிமுகமான நக்மா அடுத்ததாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்தார். தமிழில் அவருக்கென்று பெரும் கிரேஸ் இருந்தது. முக்கியமாக 90களில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. அந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், நான் இந்த விஷயத்தை செய்ய வேண்டுமென்றால் ஒரு நாள் நக்மா என்னுடன் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அதேபோல் சர்வதேச அளவிலான தாதாவுடனும் நக்மா தொடர்பில் இருந்ததாக சொல்வார்கள். அதிலும் உண்மை இருக்கிறதா என்று தெரியவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X