Silk Smitha - தூங்கக்கூட விடமாட்றாங்க.. சக நடிகையிடம் புலம்பிய நடிகை.. அப்படி என்னதான் ஆச்சு?
சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த சூழலில் சக நடிகை டிஸ்கோ சாந்தியிடம் சில்க் ஸ்மிதா புலம்பிய விஷயம் தெரியவந்திருக்கிறது.
விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.
இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.
தவம் இருந்த நடிகர்கள்: சில்க்குடன் நடித்துவிட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்களே தவம் இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. மேலும் விநியோகஸ்தர்களும் சில்க் ஆடும் பாடல் இருந்தால்தான் படத்தை வாங்குவோம் என்று கண்டிஷன் போட்ட கதையும் உண்டு. பீக்கில் இருந்தபோது சில்க் ஸ்மிதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். நிற்பதற்குக்கூட நேரம் இல்லாமல் பம்பரமாய் சுழன்றவர் அவர். ஒருகட்டத்தில் தனிப்பட்ட பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அது இன்றளவும் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புலம்பிய சில்க் ஸ்மிதா: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில்க் ஸ்மிதா குறித்து பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருமுறை நடிகையும், டான்சருமான டிஸ்கோ சாந்தியிடம் சில்க் ஸ்மிதா பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சில்க், என்னை தூங்கவே விடமாட்றாங்க. விட்டா தூக்கமே மறந்து போய்விடும்போல என வேதனையோடு சொன்னார். அதற்கு சாந்தியோ, இப்படியே போனால் உனது உடம்புதான் மோசமாகும். தயவு செஞ்சு கேட்கிற எல்லோருக்கும் கால்ஷீட் கொடுத்தாதே என்று அட்வைஸ் செய்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











