குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என அடம்பிடித்தாரா அமலா பால்?.. பகீர் கிளப்பிய பிரபலம்
சென்னை: அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்புவதாக இருக்கிறது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார். அதற்கு விஜய், ஆர்யா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார்.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமே நடந்துவிட்டதாகவும் தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. ஆனால் அமலா பால் அமைதியாகவே இருந்தார்.
இரண்டாவது திருமணம்: இந்தச் சூழலில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். கடைசியாக பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார் அமலா பால். இந்தச் சூழலில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார். அமலா பாலுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். மேலும் தனது மகனுடன் இருக்கும் வீடியோவையும் அமலா பால் பகிர்ந்திருந்தார்.
சபிதா ஜோசப்: இந்நிலையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அமலா பால் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில், "இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பால் திருமணத்துக்கு பிறகு நான் நடிப்பேன் என்று கூறினார். அதுமட்டுமின்றி குழந்தை எல்லாம் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அடம் பிடித்தார். இதனால்தான் அவர்கள் விவாகரத்து செய்துகொண்டார்கள். பிறகுதான் ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தை பெற்றுக்கொண்ட அவர், குழந்தை சற்று வளர்ந்த பிறகு மீண்டும் தென்னிந்திய மொழிகளில் உறுதியாக நடிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











