பண்ணை வீட்டில் 15 நாட்கள்.. நடிகை சௌந்தர்யாவுக்கு கிலோ கணக்கில் தங்கத்தை கொட்டிக்கொடுத்தாரா நடிகர்?

சென்னை: நடிகை சௌந்தர்யா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர். தமிழில் அவர் பொன்னுமணி, அம்மன், தவசி, படையப்பா என ஏராளமான படங்களில் நடித்தார். அவருக்கென இன்றுவரை பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த அவர் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு அரசியலில் என்ட்ரி கொடுத்த அவர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் சௌந்தர்யா. கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமான அவர் அதற்கு பிறகு தெலுங்கிலும் அடியெடுத்து வைத்தார். இரண்டு மொழிகளிலும் சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக உயர்ந்துகொண்டிருந்தபோதே தமிழில் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக பொன்னுமணி படத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து தமிழில் காதலா காதலா, அம்மன், தவசி, படையப்பா என வரிசையாக நடித்தார்.

Soundarya Sabitha Joseph Tamil Cinema

திருமணம்: தமிழ் போலவே மற்ற மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர்; தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோது தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அரசியலிலும் கவனம் செலுத்திய அவர் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும்போது விபத்தில் சிக்கி கடந்த 2004ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 31 வயதுதான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் சௌந்தர்யா குறித்து பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சௌந்தர்யாவின் உண்மையான பெயர் சௌமியாதான். சினிமாவுக்காக சௌந்தர்யா என்று பெயரை மாற்றம் செய்துகொண்டார். அவரது தந்தை கன்னடத்தில் ஒரு சில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார். அந்த வழியை பின்பற்றி கன்னடம், தெலுங்கில் நடித்த அவர் தமிழில் பொன்னுமணி படத்தில் நடித்து அறிமுகமானார்.

பெரிய மரியாதை: தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய ஆர்.வி.உதயகுமார் மீது சௌந்தர்யாவுக்கு கடைசிவரை மிகப்பெரிய மரியாதை இருந்தது. அதனால்தான் அவர் உயிரிழக்கும் பத்து நிமிடங்கள் முன்புகூட உதயகுமாரிடம் ஃபோனில் பேசினார். அப்போது அவரிடம் தனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே அவருக்கு அரசியலில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. தனது உறவினரை திருமணம் செய்துகொண்ட பிறகு; கணவருக்காக அரசியலில் ஆர்வத்தை காட்டினார். அரசியலில் வந்த குடைச்சலை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் உதயகுமாரிடம் அப்படி சொன்னார்.

கிலோ கணக்கில் தங்கம்: சில்க்குடன் நடிக்க வேண்டும் என்று நடிகர்கள் எப்படி ஆசைப்பட்டார்களோ அதேபோல் சௌந்தர்யாவுடனும் நடிக்க ஆசைப்பட்டார்கள். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஒருவர் சௌந்தர்யாவுடன் ஒரு படத்தில் நடித்தார். இருவரும் அந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக மைசூருக்கு சென்றார்கள். அப்போது அந்த நடிகரின் நண்பருடைய பண்ணை வீட்டில் இரண்டு பேரும் 15 நாட்கள் தங்கியிருந்தார்கள். அந்த சமயத்தில் கிலோ கணக்கில் சௌந்தர்யாவுக்கு அந்த நடிகர் தங்க நகைகளை கொட்டிக்கொடுத்தார் என்று அப்போது பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. நடிப்பு மட்டுமின்றி ஏழைகளுக்காக பள்ளிக்கூடங்களை எல்லாம் அவர் கட்டியிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X